???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற முடியாது: எம்.ஆர். விஜய பாஸ்கர் 0 காரைக்காலில் சுஸ்மா சுவராஜை பெண்கள் முற்றுகை! 0 ஆண்டாளின் புகழ்பாட தாம் ஆசைப்பட்டது தவறா? வைரமுத்து உருக்கம் 0 உயரம் குறித்து தொலைக்காட்சியில் கேலி: சூர்யா ரசிகர்கள் போராட்டம் 0 திராவிட இயக்கத்தை தூசிகூட தொட முடியாது: ஸ்டாலின் 0 பாரதிராஜாவை கைது செய்யவேண்டும்: இந்து அமைப்பு புகார்! 0 பேருந்து கட்டணம் அதிரடி உயர்வு! 0 20 ரூ. டோக்கன் கொடுக்க ‘மாஸ்டர் பிளான்’ போட்டோம்: தினகரன் ஆதரவாளர் 0 சொத்து குவிப்பு வழக்கு: தினகரன் சகோதாரிக்கு பிடிவாரண்ட் 0 வைரமுத்து தானாக எதையும் கூறவில்லை: நீதிமன்றம் கருத்து 0 சர்ச்சை பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு 0 பத்மாவத் திரைப்படத்திற்கு விதித்த தடைக்கு எதிராக இடைக்காலத்தடை! 0 வடகிழக்கு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு! 0 49 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு! 0 பென்னி குயிக்கிற்கு சிலைநிறுவ முழு உதவி செய்யத் தயார்: மு.க.ஸ்டாலின்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குஜராத் தேர்தலில் பாக். தலையீடு: பிரதமர் மோடிக்கு பிரகாஷ்ராஜ் காட்டமான கேள்வி

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   11 , 2017  22:25:54 IST

இந்தியாவில் நடக்கும் தேர்தலில் பாகிஸ்தானுக்கு என்ன வேலை என்றும், குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் எப்படி தலையிட முடியும் என்றும் பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில், “எனது அன்புக்குரிய பிரதமர் அவர்களே..! நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைவர்கள் மற்றும் முன்னாள் ஆட்சியாளர்கள் மீது ஒரு மாபெரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளீர்கள். நம்முடைய எதிரி நாடு, நம் நாட்டு தேர்தலில் தலையிடுவதாகவும், இங்கு யார் வெற்றி பெற வேண்டும், யார் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று முடிவு செய்து திட்டம் தீட்டுவதாகவும் கூறியுள்ளீர்கள். உங்களுடைய குற்றச்சாட்டு உண்மையானால், நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள இந்த சம்பவத்திற்கு, நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் நீங்கள், இந்த சதிச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாராணை நடத்தலாமே? அதை விட்டுவிட்டு ஏன் நாட்டு மக்களிடம் குற்றச்சாட்டு கூறுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...