???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 0 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் 0 கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு 0 கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு 0 கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை! 0 கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின் 0 விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய சீமான் மீது வழக்கு 0 கேரள மக்களுக்கு ரஜினி, கமல், விஜய்சேதுபதி நிதிஉதவி 0 கேரளாவிற்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக அரசு அறிவிப்பு 0 கேரள வெள்ளம்:: மனிதன் என்பது எத்தனை மகத்தான சொல்! 0 கேரளமக்களுக்கு உதவுவது எப்படி? 0 கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பிரதமர் ஆய்வு 0 வாஜ்பாய் மறைவு: மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு 0 முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி 0 முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காவிரி நீர்ப் பிரச்சனையிலிருந்து அரசியலை அகற்றுங்கள் - நடிகர் பிரகாஷ்ராஜ்

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   16 , 2018  02:34:51 IST

காவிரி நீர்ப் பிரச்சனையிலிருந்து இருந்து அரசியலை அகற்றுமாறு நடிகர் பிரகாஷ்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் நடக்கும் என்று எச்சரிக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போராக காவிரி பிரச்சனை நடந்து வருகிறது. அரசியல்வாதிகளின் சுயநல எண்ணம்தான் இத்தனை ஆண்டு காலமாக காவிரி பிரச்சினை தீராமல் இருப்பதற்கு காரணம். காவிரியை வைத்து கலவரம் செய்கிறவர்கள் யாரும் காவிரி ஆற்றில் மணல் எடுக்கும் மாபியாக்களுக்கு எதிராக துரும்பை கூட கிள்ளிப்போடுவதில்லை. காவிரி நீர் பங்கீட்டில் இருக்கும் உண்மையான பிரச்சினைகளையும், அவற்றுக்கான நடைமுறை தீர்வுகளையும், தமிழக மற்றும் கர்நாடக மக்களுக்கு விளக்குவது அவசியமாகிறது. இரு தரப்பிலும் சமூக அக்கறை கொண்ட வல்லுநர்களின் துணையுடன் ஒரு ஆவணப்படம் எடுக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. உண்மைகள் மக்களை சென்று சேர அனைவரும் இணைந்து செயல்படுவது அவசியம். ஒரே தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிட்டு கொள்ளக்கூடாது என்பார்கள். ஒரு நதி நீரை குடித்து அதில் விவசாயம் செய்து வாழ்ந்த மக்கள் சண்டையிட்டுக் கொள்வதும் முறையல்ல. தாய்ப்பாலும், நதிநீரும் வேறு வேறு அல்ல. நதிநீரில் இருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாக சரியாகும்." இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...