???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை 0 சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை 0 தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று 0 சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? நீதிமன்றம் 0 சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம் 0 சொத்து வரி வசூலை 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் 0 கான்பூரில் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிறு, குறு தொழில்களுக்கு ரூ.20,000 கோடி: பிரகாஷ் ஜவடேகர்

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   01 , 2020  22:18:39 IST

பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் செயல்பாடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர், ‘சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களுக்காக 20,000 கோடி ரூபாய் அளவுக்கு நிவாரண சலுகைகள் வழங்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளளது. அதனால், சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களில் 50,000 கோடி ரூபாய் வரை முதலீடு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கு 10,000 ரூபாய் வரை வங்கிகளில் கடனுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நடுத்தர தொழில்களுக்கான முதலீடு 50 கோடி ரூபாயாகவும், வருட வர்த்தகம் 250 கோடி ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.’ என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய மற்றொரு மத்திய அமைச்சர் நரேந்தி தோமர், ‘விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் 14 வகையான பயிர்களுக்கான குறைந்த ஆதார விலை, 50% முதல் 83 % வரை உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகள் அவர்களது வங்கிக் கடன்களைக் கட்டுவதற்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்படும்’என்று தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...