பொது வருங்கால வைப்பு நிதியான PPF, செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் கிசான் விகாஸ் பத்திரத்துக்கு வழங்கப்படும் வட்டி குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, PPF வட்டி விகிதம் இப்போதுள்ள 8.7 சதவிகித்தில் இருந்து 8.1 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை அமலில் இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், கிசான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி 8.7 சதவிகிதத்தில் இருந்து 7.8 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. தேசிய சேமிப்புப் பத்திரமான NSCயின் வட்டியும் 8.5 சதவிகிதத்தில் இருந்து 8.1 சதவிகிதமாக குறைக்கப்படுவதாகவும், செல்வமகள் சேமிப்புக்கு வட்டி 9.2 சதவிகிதத்தில் இருந்து 8.6 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. எனினும், அஞ்சல் நிலைய சேமிப்புக் கணக்கில் உள்ள தொகைக்கு தொடர்ந்து 4% வட்டி, வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.