அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   26 , 2021  11:57:26 IST

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனல்மின் நிலையங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக நச்சு வாயுக்களை வெளியிட்டு வருவதாக பூவுலகின் நண்பர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.


இது குறித்து அந்த அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பூவுலகின் நண்பர்கள் அமைப்பானது CREA மற்றும் ASAR ஆகிய அமைப்புகளுடன் இணைந்து தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியாகும் நச்சு வாயுக்களின் அளவு மற்றும் எத்தனை அனல்மின் நிலையங்களில் நச்சு வாயுக்களின் வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் Flue Gas Desulfuriser கருவி பொருத்தப்பட்டுள்ளது என்பது குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வானது       “Emission watch- Status assessment of SO2 emission and FGD installation for coal-based power plantsin Tamil Nadu” எனும் பெயரில் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.


இந்த ஆய்வானது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் OCEMS எனப்படும் தொடர் இணைய வழி மாசு கண்காணிப்பு அமைப்பிலிருந்து பெறப்பட்ட தரவுகள், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், என்.எல்.சி. இந்தியா நிறுவனம், தேசிய அனல்மின் நிறுவனம் போன்றவற்றிடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இந்த ஆய்வின் அடிப்படையில் தற்பொழுது தமிழ்நாட்டில் இயங்கிவரும் 40 அனல்மின் நிலையங்களில் (13,160 MW) இரண்டு நிலையங்களில் (1200MW)  மட்டும் தான் ஃப்ளு கேஸ் டீசல்பரைசர் (FGD) எனும் காற்று மாசு குறைப்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது. இன்னும் எட்டு அனல் மின் நிலையங்களுக்கு FGD கருவிகள் வாங்குவதற்கான ஏலம் விடப்பட்டுள்ளது. அதிலும் பெரிதாக முன்னேற்றம் ஏற்படவில்லை. மேலும் 30 அனல் மின் நிலையங்கள் தாங்கள் வெளியிடும் மாசைக் குறைப்பதற்கான FGD கருவியைப் பொருத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிய வந்துள்ளது.


தமிழ்நாடு அரசு மற்றும் என்.எல்.சி. நிறுவனத்தால் இயக்கப்படும் அனல் மின் நிலையங்களில் ஒரு அனல் மின் நிலையத்தில் கூட மாசு வெளியீட்டைக் குறைப்பதற்கான FGD கருவி பொருத்துவதற்கான டெண்டர் விடப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து இந்த ஆய்வை மேற்கொண்ட நபர்களுள் ஒருவரான க்ரியா அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர் சுனில் தாஹியா பேசுகையில் “ கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனல்மின் நிலையங்களுக்கான காற்று மாசு அளவுகளை நிர்ணயித்தது. இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த காற்று மாசு அளவுகளை குறைப்பதற்கான கால அவகாசம் தொடக்கத்தில் வழங்கப்பட்டது. பின்னர் இந்த கால அவகாசமானது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டே வந்தது. கடந்த மார்ச் 21, 2021 அன்று சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி மாசு அளவுகளை குறைப்பதற்கான கால அவகாசம் 2024/2025ஆம் ஆண்டு வரையில் நீட்டிக்கப்பட்டது. மாசு அளவுகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் மட்டும் ஓராண்டிற்கு 76,000 மனித உயிர்களை நம்மால் காப்பாற்றியிருக்க முடியும் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. மொத்தமாக 10 ஆண்டுகள்  இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதால் அனல்மின் நிலையங்கள் தொடர்ந்து மனித சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய நச்சு வாயுக்களை தொடர்ந்து வெளியேற்றி வந்துள்ளது. இந்த பத்தாண்டுகளில் மாசைக் குறைப்பதற்கான FGD கருவி பொருத்துவதில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டிருக்குமா என்றால் அதுவும் இல்லை. தமிழ் நாடு அரசு மற்றும் என்.எல்.சி. நிறுவனத்தால் இயக்கப்படும் அனல்மின் நிலையங்களில் ஒரு அனல்மின் நிலையத்தில் கூட மாசைக் குறைப்பதற்கான FGD கருவி பொருத்துவதற்கான டெண்டர் விடப்படவில்லை என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது” எனக் குறிப்பிட்டார்.


நெய்வேலி, சென்னை, தூத்துக்குடி, மேட்டூர் ஆகிய பகுதிகள் நாட்டிலே அதிகம் நிலக்கரி எரிக்கப்படும் பகுதிகளாக உள்ளன. இதில் நெய்வேலி மற்றும் சென்னை உலகளவில் நிலக்கரி எரிக்கப்படும் முதல் 50 பகுதிகளில் இடம்பெற்றுள்ளது. இந்த பகுதிகளில் செயல்படும் அனல்மின் நிலையங்களின் மாசு வெளியேற்றம் குறித்த கண்காணிப்பு குறித்தும் இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் தரப்பட்டுள்ள தொடர் இணைய வழி மாசு கண்காணிப்பு அமைப்பு (OCEMS) தரவுக்கும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI)  கீழ் ( ஏப்ரல், மே, ஜூன் 2021) கிடைத்த தரவுக்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் உள்ளன.  காற்று மாசை கட்டுப்படுத்தும் கருவிகள் பொருத்தப்படாத போதிலும்கூட SO2 அளவுகள் மிகவும் குறைவாக காட்டப்பட்டுள்ளது மாசு கட்டுப்பாடு வாரியத்திடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தெரியவந்தது.


பல அனல்மின் நிலையங்களில், மனிதர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வாயுவாக அறியப்பட்ட சல்பர் டை ஆக்சைடு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவ்வறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

1.மின்னுற்பத்தி ஆதாரங்களை பகுத்தாய்தல் வேண்டும்.

2.நிலக்கரி சார்ந்த மின்னுற்பத்தி முறைகளில் மேற்கொண்டு முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.

3.பழைய, அதிக மாசு ஏற்படுத்தும் மின்னுற்பத்தி நிலையங்கள் மூடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

4.ஒற்றைக் கொள்முதல் விலை ஏற்படுத்தும் சுமையைக் குறைக்கும் நோக்கில், மின்-கொள்முதல் ஒப்பந்தங்களை பகுத்தாய்விற்கு உட்படுத்த வேண்டும்.

5.முன்மொழியப்பட்ட, கட்டுமான அளவில் உள்ள அனல்மின் நிலையங்களை ஆரம்பக் கட்டத்திலேயே நிறுத்த வேண்டும்.

6.மாநிலத்தில் செயற்பாட்டில் உள்ள அனைத்து நிலக்கரி சார்ந்த மின்னுற்பத்தி நிலையங்களிலும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்பாட்டில் வைக்கும் தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

7.தொடர் இணைய வழி மாசு கண்காணிப்பு முறை (OCEMS) நிறுவல், செயல்படுத்துதல் மற்றும் அளவுத்திருத்தல் அனைத்து மின்னுற்பத்தி நிலையங்களிலும் செய்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

8.நிலக்கரி சார்ந்த மின் நிலையங்களின் மாசு கட்டுப்பாட்டு சாதனங்களின் செயல்பாட்டின் முன்னேற்றத்திற்காக, தொடர் இணையவழி மாசு கண்காணிப்பு முறை (OCEMS) மற்றும் நேரடி கண்காணிப்பு மூலம் சேகரிக்கப்பட்ட, பொது வெளியில் உள்ள தகவல்களின் தரம் மற்றும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...