???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற முடியாது: எம்.ஆர். விஜய பாஸ்கர் 0 காரைக்காலில் சுஸ்மா சுவராஜை பெண்கள் முற்றுகை! 0 ஆண்டாளின் புகழ்பாட தாம் ஆசைப்பட்டது தவறா? வைரமுத்து உருக்கம் 0 உயரம் குறித்து தொலைக்காட்சியில் கேலி: சூர்யா ரசிகர்கள் போராட்டம் 0 திராவிட இயக்கத்தை தூசிகூட தொட முடியாது: ஸ்டாலின் 0 பாரதிராஜாவை கைது செய்யவேண்டும்: இந்து அமைப்பு புகார்! 0 பேருந்து கட்டணம் அதிரடி உயர்வு! 0 20 ரூ. டோக்கன் கொடுக்க ‘மாஸ்டர் பிளான்’ போட்டோம்: தினகரன் ஆதரவாளர் 0 சொத்து குவிப்பு வழக்கு: தினகரன் சகோதாரிக்கு பிடிவாரண்ட் 0 வைரமுத்து தானாக எதையும் கூறவில்லை: நீதிமன்றம் கருத்து 0 சர்ச்சை பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு 0 பத்மாவத் திரைப்படத்திற்கு விதித்த தடைக்கு எதிராக இடைக்காலத்தடை! 0 வடகிழக்கு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு! 0 49 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்பு! 0 பென்னி குயிக்கிற்கு சிலைநிறுவ முழு உதவி செய்யத் தயார்: மு.க.ஸ்டாலின்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பொட்டு சுரேஷ் கொலைவழக்கு, 7 பேர் நீதிமன்றத்தில் சரண்.

Posted : சனிக்கிழமை,   பிப்ரவரி   02 , 2013  03:04:44 IST

தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், மத்திய மந்திரி மு.க.அழகிரியின் நெருங்கிய ஆதரவாளருமான பொட்டு” சுரேஷ். மர்ம கும்பலால் நேற்று முன்தினம் இரவு மதுரையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. “பொட்டு” சுரேசின் மனைவி ரோகினியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது “பொட்டு” சுரேசை கடந்த சில மாதங்களாக மிரட்டி வந்த 5 முக்கிய நபர்களின் பெயர்களை தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் முதல் கட்ட விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

 

முன்னாள் துணைமேயர் பி.எம்.மன்னன், பொட்டு சுரேசின் கார் டிரைவர் மணிகண்டன் மற்றும் மேலமாசி வீதி சரவணன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரிடம் இந்த கொலைக்கான பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.கொலை செய்யப்பட்ட பொட்டு சுரேசுக்கும், முன்னாள் வேளாண் விற்பனைக்குழு தலைவராக இருந்த “அட்டாக்” பாண்டிக்கும் கடந்த தி.மு.க. ஆட்சியின் போதே முன்விரோதம் இருந்து வந்தது,இது தொடர்பாக விசாரிக்க அட்டாக் பாண்டியை தேடி சென்ற போது அவர் தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு விரைந்து சென்றுள்ளனர்.

 

இந்நிலையில்  இன்று காலை “பொட்டு” சுரேஷ் கொலை வழக்கு சம்பந்தமாக மதுரை கீரைத்துறை பகுதியை சேர்ந்த சபாரத்தினம் , சந்தானம், ராஜூ, லிங்கம், செந்தில், சேகர், கார்த்திக் ஆகிய ஏழு பேர்  திண்டுக்கல் அருகே உள்ள நத்தம் கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி ஆனந்தன் உத்தரவிட்டார். சரண் அடைந்த அனைவரும் “அட்டாக்” பாண்டியின் கூட்டாளிகள் என்பது குறிப்பிடதக்கது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...