???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது! 0 காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் 0 குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் 0 கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி 0 மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம் 0 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியில்லை: கமல் அறிவிப்பு 0 டெல்லி தீவிபத்து: உயிரிழப்பு 43 ஆக அதிகரிப்பு 0 உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: ரஜினி மக்கள் மன்றம் 0 தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பொங்கல் பரிசை வழங்க தடையில்லை: தேர்தல் ஆணையர் 0 உள்ளாட்சி தேர்தல்: திமுக மீண்டும் வழக்கு 0 தெலங்கானா என்கவுண்டர்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி 0 ”நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரியனுமே": சுப்பிரமணியன் சுவாமி 0 தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது: ரஜினி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

14 ஆயிரம் புதிய நிர்வாகிகளுக்கு பொறுப்பு - கமல்ஹாசன்

Posted : சனிக்கிழமை,   நவம்பர்   02 , 2019  06:49:22 IST

மக்கள்‌ நீதி மய்யம் கட்சி அலுவலகத்திற்கு வந்திருக்கும் விண்ணப்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கப்படுமென கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது மக்கள்‌ நீதி மய்யம் கட்சியின்‌ புதிதாக விரிவாக்கம்‌ செய்திருக்கும்‌ கட்டமைப்பில்‌, கட்சியின்‌ அனைத்து நிலைகளிலும்‌ பொறுப்பாளர்களை நியமிக்கும்‌ திட்டத்தின்‌படி ஏற்கனவே சில பொறுப்புகளுக்கான நியமனங்களை அறிவித்துள்ளேன். அதை‌ தொடர்ந்து, மேலும்‌ கீழ்கண்ட சில பொறுப்புகளுக்கான நியமனங்களை இப்போது அறிவிக்கிறேன்‌.

 

நான்‌ ஏற்கனவே குறிப்பிட்டபடி வரும்‌ 2021-ல்‌ தமிழகத்தின்‌ அரசியலை மாற்றியமைக்கும்‌ லட்சியத்தை வலுப்படுத்த கட்சி தொண்டர்களும்‌, என் அன்பிற்குரிய நற்பணி இயக்கத்தினரும்‌ தற்போது நியமிக்கப்படும்‌ பொறுப்பாளர்களோடு இணைந்து செயல்பட்டு, மக்களுக்கான நல்லாட்சி கனவை நிறைவேற்றிட உழைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்‌.

 

கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்திருக்கும், விண்ணப்பங்களில் இருந்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தொடர்ந்து அறிவிக்கப்படுவார்கள் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...