???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ரஜினியுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்! 0 குடியுரிமை சட்ட திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம்! 0 உ.பி.: பாலியல் வழக்குகளை விசாரிக்க 218 விரைவு நீதிமன்றங்கள்! 0 குடியுரிமைக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்தியானந்தா 0 வெங்காய விலையை கட்டுப்படுத்த திராணி இல்லையா? மு.க.ஸ்டாலின் கேள்வி 0 கர்நாடகா: 12 தொகுதிகளை கைப்பற்றியது பாஜக! 0 விற்பனைக்கு வந்தது எகிப்து வெங்காயம்! 0 ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படாது: மத்திய அரசு 0 ஊராட்சித் தலைவர் பதவி ரூ.50 லட்சத்துக்கு ஏலம்! 0 உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தொடங்கியது! 0 காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் 0 குடியுரிமை மசோதா மக்களவையில் இன்று தாக்கல் 0 கர்நாடகா இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 திராவிடம் அழிந்துவருகிறது;ஆன்மீகம் தழைக்கிறது: குருமூர்த்தி 0 மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: ப. சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அஞ்சல்துறைத் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜுலை   14 , 2019  22:12:39 IST

மத்திய அரசு நடத்தும் தபால்துறைத் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.

தபால்துறையில் அஞ்சலர் உட்பட 4 வகையான பணியிடங்களுக்கான தேர்வுகள் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த நிலையில், தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்பு கடந்த 11-ம் தேதி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தபால் தேர்வுகள் இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், திடீரென தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தபால்துறைத் தேர்வை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்படுவதற்கு எதிராக சமூக ஆர்வலர் ஹென்றி டிபேன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசர வழக்குத் தொடர்ந்துள்ளார். மனு மீதான விசாரணையை நீதிபதிகள் ரவிச்சந்திர பாபு, மகாதேவன் அமர்வு விசாரிக்கிறது. ஞாயிறு தேர்வு நடைபெற இருந்த நிலையில், அவசரவழக்காக அதனை விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘தேர்வை நடத்தத் தடையில்லை. அதேநேரத்தில், தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது. தேர்வு இரு மொழிகளில் மட்டும் நடத்தப்படுவது தொடர்பாக மத்திய அரசு அறிக்கை அளிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...