???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு 0 அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது 0 ரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த் 0 நடிகர் சங்கத் தேர்தல் ரத்து! 0 கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் 0 தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் 0 கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் 0 சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு 0 இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் 0 குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 0 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து! 0 பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: ராகவா லாரன்ஸ் 0 தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டு பேசியிருக்கலாம்: டிடிவி தினகரன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பூண்டி ஏரியிலிருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் திறப்பு

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   07 , 2019  23:50:33 IST

கிருஷ்ணா நீர் வரத்து அதிகரித்ததால் சென்னை குடிநீருக்காக பூண்டி சத்யமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 20 கன அடி நீர், பேபி கால்வாய் மூலம் புழல் சென்னை குடிநீர் வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

சென்னை குடிநீருக்காக கடந்த 25ஆம் தேதி முதல் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ண நதி நீர் திறக்கப்பட்டது. தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்ட்டுக்கு வினாடிக்கு 630 கனஅடி வீதம் கடந்த 28-ம் தேதி வந்தது.

அங்கிருந்து பூண்டி நீர்த்தேகத்திற்கு தொடர்ந்து சென்றதால் அங்கு நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. மேலும் கண்டலேறு அணையில் நீர் திறப்பும், விநாடிக்கு ஆயிரத்து 300 கன அடிக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது, விநாடிக்கு 700 கன அடி கிருஷ்ணா நீர், தமிழக எல்லையான ஜீரோபாய்ண்டிற்கும், அங்கிருந்து பூண்டி நீர்த்தேக்கத்துக்கு விநாடிக்கு 596 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது.

பூண்டி நீர்தேக்கத்திற்கு கிருஷ்ணா நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சென்னை நகரின் குடிநீர்த் தேவைக்காக பேபி கால்வாய் வழியாக விநாடிக்கு 20 கனஅடி நீர், புழல் ஏரிக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை குடிநீர் விநியோகம் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...