![]() |
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார் பொன்ராஜ்!Posted : புதன்கிழமை, மார்ச் 03 , 2021 16:19:59 IST
அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் இன்று மக்கள் நீதி மயத்தில் இணைந்ததையடுத்து அக்கட்சியின் துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அப்துல் கலாமுடன் இணைந்து பணியாற்றிய அவரது உதவியாளர் பொன்ராஜ் மக்கள் நீதி மய்யத்தில் இணைவதாகவும், அவர் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய பொன்ராஜ், அப்துல் கலாம் பெயரில் கட்சி தொடங்கியதால் இன்று வரை கட்சியைப் பதிவு செய்யமுடியவில்லை. பாஜக அரசு இதனைத் தடுத்து வருகிறது. கலாமின் அறிவார்ந்த அரசியல் காலத்தின் கட்டாயம். அவர் கனவை நினைவாக்கத் தொடர்ந்து உழைப்பேன். வரும் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 120 தொகுதிகளில் வெற்றி பெரும். மாற்றம் இப்போது வரவில்லை என்றால் எப்போதும் வராது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
|
|