???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் 0 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் 0 பாகிஸ்தான் மீது இந்திய அணி நடத்திய மற்றொரு தாக்குதல்: கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா! 0 நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் 0 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! 0 வெப்ப அலை காரணமாக ஒரே நாளில் 29 உயிரிழப்பு 0 நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வலியுறுத்துவோம்: டி. ஆர். பாலு 0 நீட் தேர்வு தோல்வியால் எடப்பாடியைச் சேர்ந்த மாணவர் தற்கொலை 0 தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டு திரும்பியுள்ளார் முதலமைச்சர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 தமிழ்ச் சூழலின் அவலம் பற்றிய புலம்பலில் இருக்கும் இன்பம் அலாதியானது!- காலச்சுவடு கண்ணன் நேர்காணல்! 0 மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து கடலுக்குள் சென்றனர் மீனவர்கள்! 0 ஒற்றுமையோடு செயல்பட்டால் ஸ்டாலின் முதல்வராவது உறுதி: ப.சிதம்பரம் 0 முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்ப்போம்: நிதிஷ் குமார் 0 கொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் தேர்வு! 0 மெட்ரோவில் இலவச பயணம் செய்ய அனுமதியளிக்கக் கூடாது: மோடிக்கு மெட்ரோ மேன் கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க உயர் நீதிமன்றம் கட்டுப்பாடு!

Posted : புதன்கிழமை,   ஜனவரி   09 , 2019  22:06:26 IST

கடந்த 6-ம் தேதி பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். தற்போது, தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
 
இந்நிலையில், அரசு பணம் தேவையில்லாமல் செலவளிக்கப்படுவதாகக் கூறி, கோவையைச் சேர்ந்த டேனியல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
 
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரூ.1000 வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
இதன் மூலம் முன்னுரிமை பெறாத மற்றும் சர்க்கரை மட்டும் வாங்கும் வெள்ளை நிற ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு கிடைக்காது.
 
மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அரிசி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் முன்னுரிமை அடிப்படையில் தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 76,99,940.
 
மத்திய, மாநில அரசின் உதவியுடன் 35 கிலோ அரிசி உட்பட அனைத்து பொருட்களும் முன்னுரிமை அடிப்படையில் பெறும் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 18,64,600.
 
மாநில அரசின் நிதி உதவியுடன் மட்டும் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 90,08,842 ஆகும்.
 
நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மேல் உள்ள மூன்று வகையான  (1, 85,73,382 குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரொக்கமாக ஆயிரம் ரூபாய் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது
 
மாநில அரசின் நிதி உதவியுடன் அரிசி தவிர்த்து முன்னுரிமையற்ற  ( சர்க்கரை ) குடும்ப அட்டைகளுக்கு (10, 01, 605) பொங்கல் பரிசு கிடைக்காது.
 
எந்தப் பொருளும் இல்லாத முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளுக்கும்  (41,106) பொங்கல் பரிசு கிடைக்காது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...