???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி! 0 அனுமதி இல்லாமல் உள்ளே வரக்கூடாது: சிபிஐக்கு ஆந்திர அரசு தடை 0 கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் பிரதமர் மோடி விசாரிப்பு 0 புயலில் மரணமடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு 0 கஜா புயலால் 12,000 மின் கம்பங்கள் பாதிப்பு: அமைச்சர் தங்கமணி தகவல் 0 கஜா புயல்: 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை 0 கஜா புயல் பாதிப்புகளை வேதாரண்யம் செல்கிறார் மு.க. ஸ்டாலின் 0 புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: ராமதாஸ் 0 பத்து மாவட்டங்களை சூறையாடிய கஜா புயல்! 0 கஜா புயலுக்கு இதுவரை 20 பேர் பலி 0 கரையைக் கடந்தது கஜா புயல்! 0 கஜா புயல்: அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து! 0 அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி ‘நியூஸ் ஜெ’ தொடக்கம்! 0 சபரிமலையில் பெண்களுக்கு தனியாக நாட்களை ஒதுக்க கேரள அரசு திட்டம் 0 இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஸ்ரீரங்கம் கோவில் சிலை கடத்தல் வழக்கு: பொன்.மாணிக்கவேல் விசாரிக்க உத்தரவு

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   09 , 2018  08:26:48 IST

ஸ்ரீரங்கம் கோயில் சிலை கடத்தல் புகார் தொடர்பாக 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஐஜி பொன் மாணிக்கவேல் இந்த புகார் தொடர்பாக விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயில் மூலவர் சிலை திருடப்பட்டிருப்பதாகவும், உற்சவர் சிலை மற்றும் கோயிலின் பழங்கால பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், 2012-ம் ஆண்டில் ஆகம விதிகளுக்குட்பட்டு ஸ்ரீரங்கம் கோயில் சீரமைப்பு பணிகளின் போது சிலைகள் சீரமைக்கப்பட்டது. ஆனால் சிலைகள் மாயமானதாக கூறும் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்றும் அனைத்து சிலைகளும் கோயிலில்தான் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
 
அதேபோல, பாரம்பரிய கட்டடத்தை சிறப்பாக புதுப்பித்தற்காக ஸ்ரீரங்கம் கோயிலுக்கு 2017-ம் ஆண்டு யூனஸ்கோ விருது வழங்கியிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆகம விதிகளுக்குட்பட்டுதான் அதிகாரிகள் கோயிலுக்குள் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் கடவுள்களுக்கும் தனி மனித சுதந்திரம் இருப்பதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
இதனையடுத்து, ஸ்ரீரங்கம் கோயிலில் சிலை கடத்தல் புகார் தொடர்பாகவும், ஆயிரம் கால் மண்டபத்தையும் ஆய்வு செய்து 6 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதனைத்தொடர்ந்து இந்த வழக்கை ஐஜி பொன் மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...