???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு 0 அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது 0 ரஜினி வெறும் அம்புதான்; அவரை யாரோ இயக்குகின்றனர்: பிரமேலதா விஜயகாந்த் 0 நடிகர் சங்கத் தேர்தல் ரத்து! 0 கடவுள் முன் பிரச்னை செய்பவர்களுக்கு கோயில் கருவறையில் இடமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் 0 தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உயரும்: முதல்வர் 0 கடைசி விருப்பம்: மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள் 0 சவுதி அரேபியாவில் பணியாற்றும் கேரள நர்சுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு 0 இந்திய பொருளாதாரம் மீண்டு எழும்: பியூஸ் கோயல் 0 குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்: அரசாணை வெளியீடு 0 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து! 0 பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவர் ரஜினி: ராகவா லாரன்ஸ் 0 தமிழருவி மணியனிடம் ரஜினி விவரம் கேட்டு பேசியிருக்கலாம்: டிடிவி தினகரன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நீதிமன்றங்களே காரணம்: பொன்.மாணிக்கவேல்

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   13 , 2019  00:12:36 IST

நெல்லை கல்லிடைக்குறிச்சியில் அறம் வளர்த்தநாயகி அம்மன் கோயிலில் இருந்து 1982-ம் ஆண்டு கடத்தப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலிய மியூசியத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. அங்கிருந்து மீட்கப்பட்டு டெல்லி கொண்டு வரப்பட்ட நடராஜர் சிலை சென்னை கொண்டு வரப்படுகிறது என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி  பொன்.மாணிக்கவேல் முன்னதாக தெரிவித்தார்.

மேலும் அவர், ”சிலை கடத்தல் வழக்கில் தமிழக அரசை குறை சொல்ல விரும்பவில்லை. தமிழக அரசுக்கும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் இடையே உள்ள தகவல் பரிமாற்றத்தில் தான் பிரச்சினை உள்ளது.

இந்த விவகாரத்தில் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை, இன்னும் நிறைய சிலைகள் மீட்கப்பட வேண்டியுள்ளது . அனுமதி அளித்தால் எல்லா சிலைகளும் மீட்கப்படும். ஆஸ்திரேலியாவில் இருந்து நடராஜர் சிலையை மீட்க உதவிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி.  நடராஜர் சிலை அங்குள்ள அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டது, எந்த சிலையும் காட்சி பொருள் அல்ல. நாம் கும்பிடும் சிலைகள் வெளிநாட்டில் காட்சி பொருளாக வைக்கப்படுகின்றன.

விமானத்தில்  கொண்டு வர பணம் இல்லாததால், ரெயில் மூலம் சிலையை கொண்டு வந்தோம். 37 ஆண்டுகளுக்கு  முன் கடத்தப்பட்ட சிலைகளை கண்டுபடித்து மீட்டு கொண்டு வந்துள்ளோம். கடத்தப்பட்ட  சிலைகளை மீட்க நீதிமன்றங்களே காரணம். சிலைக்கடத்தல் வழக்குகளுக்கு தனது குழு மற்றும் ஊடகங்களும் உதவியாக இருந்தன” இவ்வாறு அவர் தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...