???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்? 0 மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பு முடிவுகள்! 0 நாடு முழுவதும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது; 60.21 சதவீத வாக்குகள் பதிவு! 0 பிரதமரின் கேதர்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்: திரிணாமூல் புகார் 0 வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்க: ஸ்டாலின் 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல் 0 சென்னையில் மழைக்கு வாய்ப்பு! 0 பி.எட். தேர்வு தேதி மாற்றம்: உயர் கல்வித்துறை அறிவிப்பு 0 மே 23-க்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கும்: ஸ்டாலின் உறுதி 0 நாளை மறுதினம் இறுதிகட்டத் தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவு! 0 கோட்சே விவகாரம்: பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   12 , 2019  23:47:16 IST

பொள்ளாச்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பெண்களை மயக்கி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி வந்துள்ளது.
 
அதில், பாதிக்கப்பட்ட ஒரு பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.அதனையடுத்து, இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, காவல்துறை நான்கு பேரை கைது செய்துள்ளது.
 
இந்தநிலையில், இந்தக் கும்பல் இளம் பெண்களை சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்யும் ஓரிரு நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ வெளியானது. அந்த வீடியோ தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நீதி கேட்டு, பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இன்று காலையில் தமிழக டி.ஜி.பி ராஜேந்திரன் வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு சில மணி நேரங்களிலேயே சி.பி.ஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
தமிழக காவல்துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை மற்றும் ஆடியோ, வீடியோ ஆதாரங்கள் மூலம் சி.பி.ஐ விசாரணையை செய்யத் தொடங்கும் என்று தெரிகிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...