???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தந்தை மகன் மரணம்: இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் 0 இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத உதவித் தொகை 0 உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம்: அறந்தாங்கி சிறுமியின் கொடூர சம்பவம் குறித்து ஹர்பஜன் 0 வன்கொடுமை செய்து படுகொலை: அறந்தாங்கி சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி 0 மேலும் 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று! 0 கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் பரிதாப மரணம்! 0 என்ஜினீயரிங் கல்லூரிகளில் வகுப்புகள் ஆகஸ்டு 16-ந்தேதி தொடங்கலாம்: ஏ.ஐ.சி.டி.இ. 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்குகிறது! 0 பொதுத்தேர்வு குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது! 0 அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி 0 தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு 0 தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது 0 சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது! 0 சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: கொலைவழக்குப் பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: விசாரணை விவரங்களை வெளியிட நீதிமன்றம் மறுப்பு

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   04 , 2019  05:32:56 IST

பொள்ளாச்சி  பாலியல் வன்முறை வழக்கில்  விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது என்று சிபிஐ தெரிவித்ததால் , அதை மனுதாரர்களுக்கு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

 

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்த விவகாரம் தமிழகத்தையே  அதிரவைத்தது.  இந்த  வழக்கின் விசாரணை காவல்துறையினருடமிருந்து சிபிசிஐடி- க்கும் இறுதியாக சிபிஐ-க்கும் மாற்றப்பட்டது.

 

இதைத்தொடர்ந்து, வழக்கில் கைதான 7 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணையை தொடங்கியது.

 

இந்நிலையில் இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி மற்றும் நீதிபதி சரவணன் அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கின் விசாரணை ரகசிய விசாரணையாக இருப்பதால், இறுதி அறிக்கையை மனுதாரர்களுக்கு வழங்குவது அதை பகிரங்கப்படுத்துவதாக ஆகிவிடும் என தெரிவித்தார்.

 

மேலும் விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடியும் வரை, கைது செய்யப்பட்ட அனைவரும் தொடர்ந்து சிறையிலேயே அடைக்கப்பட்டிருக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டது.

 

சிபிஐயின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள் விசாரணை அறிக்கையை மனுதாரருக்கு வழங்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை டிசம்பர் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...