???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கேரளாவில் பழங்குடி அடித்துக்கொலை: 2 பேர் கைது, 5 பேரிடம் விசாரணை 0 பொறியியல் கலந்தாய்வுக்கு இனி நேரில் வரவேண்டியதில்லை: அமைச்சர் தகவல்! 0 பல்கலைகளில் பல கோடி ரூபாய் ஊழல்: அன்புமணி குற்றச்சாட்டு! 0 சென்னை மீனவர்கள் மீது கடலோர காவல்படை தாக்குதல்! 0 கனடா பிரதமருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு! 0 டி.டி.வி.தினகரனுக்கு கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ ஆதரவு 0 ஜெயலலிதா பிறந்த நாள்: சென்னை வருகிறார் பிரதமர் மோடி 0 தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்! 0 ரஜினியை முதல்வராக முன்னிறுத்தி அரசியல் மாநாடு! 0 தலைமை செயலாளரை தாக்கிய வழக்கு: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களின் ஜாமின் மனு தள்ளுபடி 0 தயாரிப்பாளர்கள் - டிடிஎஸ் நிறுவனம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி 0 புதிய கட்சி தொடங்கியுள்ள கமலுக்கு பாரதிராஜா ஆதரவு 0 அதிமுக எங்கள் கட்சி: டி.டி.வி.தினகரன் பொளேர்! 0 ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ் 0 நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆ.த.தேர்வு- 69% ஒதுக்கீடு கேட்கிறது பதிய தமிழகம்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   20 , 2013  04:50:19 IST

ஆசிரியர் தகுதித்தேர்வில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறையைக் கடைபிடிக்க வேண்டும்
என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது பற்றிய அவரின் அறிக்கை:

தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புக்களில் சுதந்திரத்திற்கு
முன்பிருந்தே இட ஒதுக்கீட்டு முறை அமலாக்கப்பட்டு வருகிறது. கடந்த 20
வருடத்திற்கு மேலாக தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறை
கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடத்தில் இடைநிலை மற்றும்
பட்டதாரி ஆசிரியர்கள் பணி இடங்களுக்கு தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு
15000 த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதில் இட
ஒதுக்கீட்டு முறை அறவே கடைப்பிடிக்கப்படவில்லை.

 

மொத்தகாலிப் பணியிடங்களில் 31 சதவிகிதம் பொதுப் பிரிவினருக்கும், 30 சதவிகிதம்
பிற்பட்டோருக்கும், 20 சதவிகிதம் மிகவும் பிற்பட்டோருக்கும், 18 சதவிகிதம்
பட்டியலினத்தவருக்கும், 1 சதவிகிதம் பழங்குடியினருக்கும் என ஒவ்வொரு
பிரிவினருக்கும் எவ்வளவு இடங்கள் என்பதை வெளிப்படையாக அறிவித்து அதை 100
அல்லது 200 புள்ளிகள் சுழற்சி முறையில் நிரப்பப்பட வேண்டும்.

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் சுழற்சி முறை
( Roster )  கடைப்பிடிக்கப்படாததின் விளைவாக பட்டியலின வகுப்பினர், மிக
மிக பின் தங்கிய வகுப்பினர், பிற்பட்டோர், பழங்குடியினர் தங்களுக்குரிய
 பங்கைப் பெற முடியவில்லை. இது சமூக நீதிக்கு எதிரானது. எனவே கடந்த இரண்டு
ஆண்டுகளில் தேர்வு பெற்ற ஒவ்வொரு பிரிவினரின் பின்னடைவு பணியிடங்களைக்
கணக்கிட்டு தற்பொழுது நடைபெற்றுள்ள 17,000 பணி இடங்களுக்கான ஆசிரியர்
தேர்விலும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை சுழற்சி முறையில் நிரப்பிய பின்னரே
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். இதை வலியுறுத்தி தமிழ்நாடு
ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பாக வரும் 26 ஆம் தேதி எனது தலைமையில்
பல்லாயிரக்கணக்கான இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்ளும்
ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...