???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை கைது! 0 சலூன்கள், பியூட்டி பார்லர் செல்ல ஆதார் அட்டை கட்டாயம்: தமிழக அரசு 0 பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கkகோரி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு 0 சென்னையில் பைக்கில் 2 பேர் சென்றால் ரூ.500 அபராதம் 0 பொருளாதாரத்தை மோசமாக கையாளுகிறார் மோடி: ராகுல் காந்தி 0 இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும்: பிரதமர் மோடி உறுதி 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'பேனர் வைத்தால் நிகழ்ச்சிக்கு வரமாட்டேன்' - மு.க. ஸ்டாலின்

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   13 , 2019  03:29:45 IST


Andhimazhai Image
சென்னையில் அதிமுக பிரமுகரின் இல்லத் திருமண விழாவுக்காக வைக்கப்பட்ட வரவேற்பு பேனரால் இளம்பெண் சுபஸ்ரீ மரணமடைந்தது அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் பேனர் வைக்க கூடாது என தமது கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
 
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் திமுக நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது என்று மீண்டும் அறிவுறுத்த விரும்புகிறேன். இந்த அறிவுரையை யாரேனும் மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நான் பங்கேற்கும் நிகழ்ச்சியாகவோ, கூட்டமாகவோ இருந்தால் அதில் நான் பங்கேற்க மாட்டேன் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.
 
“பாட்டாளி மக்கள் கட்சியின் நிகழ்ச்சிகளுக்கு பதாகைகள், கட்-அவுட்களை வைக்கக் கூடாது என்ற எனது ஆணை இன்றும், என்றும்  பா.ம.க. நிர்வாகிகளால் கடைபிடிக்கப்பட வேண்டும்.  இந்த விதியை மீறுவது குறித்து பா.ம.கவினர் நினைத்துக் கூட பார்க்கக் கூடாது” என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
அதிமுக கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் "மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், கட் அவுட்டுகள் பிளக்ஸ் போர்டுகள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
“நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு இடையூறாக எக்காலத்திலும் இனி பதாகைகள் சாலைகளில் வைக்கமாட்டோம் என்று உறுதியேற்கிறோம்” என சீமான் கூறியிருக்கிறார்.
 
”சுபஸ்ரீ நிகழ்வை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு அமமுக தொண்டர்கள் பேனர் வைக்க வேண்டாம்” – டிடிவி. தினகரன்.
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...