???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தென்கொரியாவில் பரவும் கொரோனா வைரஸ்; 556 பேருக்கு பாதிப்பு! 0 அரசியலமைப்பையும் கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு: ஆய்ஷி கோஷ் 0 சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கோரி ரஜினி கடிதம் 0 பிரதமரை புகழ்ந்து பேசிய நீதிபதிக்கு வலுக்கும் கண்டனம் 0 'உத்திர பிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை' 0 பிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி: உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா 0 டிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ் 0 இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு 0 ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கு தடையா?: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் 0 ராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி 0 வாணியம்பாடி திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் 0 கீழடி அருங்காட்சியகம்: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு! 0 சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக இருப்போம்: அதிமுக அறிக்கை 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு - அரசியல் தலைவர் கண்டனம்

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   26 , 2019  03:15:37 IST


Andhimazhai Image
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அங்கு அம்பேத்கருடைய சிலை உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சிலை தகர்க்கப்பட்ட அதே இடத்தில் தமிழக அரசு இன்று வெண்கலத்தால் ஆன அம்பேத்கரின் புதிய சிலையை நிறுவியது.
 
ராஜாளிக்காடு பகுதியில் இருந்து நேற்று வேதாரண்யம் வந்த ஒருவரின் ஜீப் மோதியதில் 21-வயது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார். இதனால் விபத்துக்கு காரணமான ஜீப் தீ வைத்து கொளுத்தப்பட்டதாக தெரிகிறது. பின்னர் இந்த சம்பவங்களால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அப்போது வேதாரண்யத்தில் இருந்த அம்பேத்கர் சிலையை சிலர் தகர்த்தனர். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியானது. தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவிவந்த நிலையில், இன்று புதிய சிலையை தமிழக அரசு நிறுவியிருக்கிறது.
 
அம்பேத்கர் சிலை தகர்க்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூகப் பதற்றத்தைத் தணிக்கும் விதமாகத் தமிழக அரசு விரைந்து எடுத்துள்ள இந்த நடவடிக்கையைப் பாராட்டுகிறோம், நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதுபோலவே இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட சாதி பயங்கரவாதிகளை ஒடுக்குவதிலும் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்தவேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இதுவே ஒரு மோசமான முன்னுதாரணமாக ஆகிவிடும். எனவே, இதில் எவ்வித சமரசமும் கூடாது எனத் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
 
புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து கருத்து தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் எமது நன்றி. தமிழகம் சாதி, மத பயங்கரவாதிகளின் வேட்டைக்காடாக ஆகிவிடக்கூடாது. தந்தை பெரியார் உழைத்து உருவாக்கிய சமூக நீதி பூமியாகவே இது தொடர வேண்டும். அதைக் காப்பதற்கு நாம் எல்லோரும் உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" என அவர் தெரிவித்துள்ளார்.  
 
 
"சமூக நல்லிணக்கமும், ஒற்றுமையும் இருந்தால்தான் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழும் என்பதை இதில் தொடர்புடையவர்கள் நன்கு உணர வேண்டும். அம்பேத்கர் சிலையை உடைத்த வன்முறைக் கும்பலை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அரசு தரப்பில் மாற்று ஏற்பாடு செய்து, உடனடியாக மற்றொரு அம்பேத்கர் சிலை அங்கே நிறுவப்பட்டு இருப்பது ஆறுதல் தருகிறது.
 
ஆனால், இதுபோன்ற வன்முறைகள், சிலை உடைப்புகள் தொடராமல் இருக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவல் நிலையத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை சில சுயநல சாதிவெறி சக்திகள் உடைப்பதும், சிலையை உடைத்து அப்புறப்படுத்தும் வரை காவல்துறை தடுத்து நிறுத்தாமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பதும் பல கேள்விகளை எழுப்புகிறது. இவ்வாறு காவல்துறை ஒரு சார்புத் தன்மையோடு செயலற்று இருப்பது தொடர்கதையாகி வருவது தமிழகத்தில் மக்கள் ஒற்றுமையையும், சட்டம் - ஒழுங்கையும் பாதுகாக்க உதவாது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.
 
காவல்துறையின் இந்த மெத்தனப்போக்கை வன்மையாக கண்டிப்பதுடன், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இப்பகுதியில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த உயர்மட்ட அதிகாரிகள் கொண்டகுழு அமைத்து விசாரித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary
Political leaders condemned vedharanyam issue

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...