???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 யூட்யூப் பிரபலம் மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு! 0 தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 135 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி 0 ஊரடங்கு: மட்டன் கிலோ ₹1200க்கு விற்பனை! 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

போலீஸ் பணிக்கு கூலி வேலை செய்வதே மேல்: வைரலாகும் பதிவு!

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   17 , 2020  20:08:19 IST

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் 2011 -ம் ஆண்டு பயிற்சி முடித்து, காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்துள்ளார். அவர், பணியில் நேர்மையாக இருந்ததால் பல்வேறு நெருக்கடிகளுக்கும் தொடர்ச்சியான பணியிட மாற்றங்களுக்கும் உள்ளானதாக கூறப்படுகிறது. இதுவரையில் 8 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் சென்னை ஆயுதப்படையிலிருந்து தூத்துக்குடி தருவைகுளம் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.

சென்னை ஆயுதப்படையில் பணியாற்றியது தொடர்பாக ஆவணங்களை ஏன் சமர்பிக்கவில்லை என்று மாவட்ட எஸ்.பி, ராஜ்குமாருக்கு மெமோ கொடுத்துள்ளார். ஜனவரி மாத சம்பளம் வழங்கப்படாததால், விரக்தியடைந்த உதவி ஆய்வாளர் ராஜ்குமார், 15 நாள் விடுப்பில் சென்றுள்ளார். அமைச்சுப்பணியாளர்கள் செய்த தவறுக்கு தன்னை அதிகாரிகள் தண்டிப்பதாகவும் ராஜ்குமார் நண்பர்களிடம் புலம்பியுள்ளார்.

லஞ்சப்பணத்தை எதிர்ப்பார்க்கும் அமைச்சுப் பணியாளர்களை தான் கவனிக்கவில்லை என்பதால், தனது கோப்புகளை அனுப்பாமல் இருப்பதாகவும் ராஜ்குமார் கூறியுள்ளார். தனது மனைவியின் மருத்துவச்செலவு, வங்கி கடன் ஆகியவற்றை செலுத்த முடியாமல் சிரமப்பட்டுவரும் ராஜ்குமார், உயர் அதிகாரி தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காணவில்லை என்றால், கூலி வேலைக்கு போக முடிவு செய்துள்ளதாகவும் புலம்பியுள்ளார். இதுகுறித்து எழுதிய அவருடைய முகநூல் பதிவு வைரலாகி வருகிறது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...