அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்! 0 நாகலாந்து துப்பாக்கிச் சூடு: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை! 0 நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! 0 கோவை வேளாண். பல்கலையில் 80% பேர் தோல்வி; மாணவர்கள் போராட்டம்! 0 நாகலாந்து: தீவிரவாதிகள் என நினைத்து ராணுவம் தாக்குதல் 13 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை! 0 ரஷ்ய அதிபர் புதின் இன்று டெல்லி வருகை 0 ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21-ஆக உயர்வு 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் விளக்கம் 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்! 0 கன்னத்தில் அறைந்தார்: நடிகர் விஜய்சேதுபதி மீது புதிய வழக்கு! 0 போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா! 0 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! 0 சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மாணவர்கள் போராட்டம்: மெரினாவில் போலீசார் குவிப்பு!

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   23 , 2021  11:14:32 IST

ஆன்லைனிலேயே தொடர்ந்து தேர்வுகளை நடத்தக்கோரி மதுரையில் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதைதொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. ஆனால் இனி ஆன்லைனில் தேர்வுகள் நடைபெறாது என்றும், நேரடியாகவே தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் மாணவர்கள் ஆன்லைனிலேயே தேர்வுகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
 
இந்தநிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக நேற்று தகவல் பரவியது. இதைதொடர்ந்து அங்கு போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
 
ஜல்லிக்கட்டுக்கு திரண்டதை போன்று ஆன்லைன் தேர்வை வலியுறுத்தியும் மாணவர்கள் அதிகளவில் கூடிவிடக்கூடாது என்பதற்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் மெரினா கடற்கரை பகுதியில் குவிக்கப்பட்டனர். இன்று 2-வது நாளாகவும் மெரினா கடற்கரையில் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். அண்ணாசதுக்கம், ஐஸ் அவுஸ், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கம் முதல் நேப்பியர் பாலம் வரையில் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். கடற்கரை மணல் பரப்பிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...