???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்! 0 விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு 0 தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு 0 சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் 0 தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்! 0 காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு! 0 சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி 0 ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை! 0 அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி! 0 கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   14 , 2018  02:37:39 IST

டெல்லி அரசின் தலைமை செயலாளர் அன்சூ பிரகாஷ் தாக்கப்பட்டது தொடர்பான  வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட 13 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
 
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவர் மாதம் கெஜ்ரிவால் இல்லத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, தலைமை செயலர் அன்சூ பிரகாஷ், அமைச்சர்கள், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
அப்போது, திடீரென ஏற்பட்ட வாக்குவாதத்தில் அன்சூ பிரகாஷை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தாக்கியதாக தெரிகிறது. இதுதொடர்பாக, அன்சூ பிரகாஷ் டெல்லி போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மனீஷ் சிசோடியா மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக, அப்போது ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
இந்த வழக்கு தொடர்பாக, முதல்வர் கெஜ்ரிவாலிடம் அண்மையில் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு எதிராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...