அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பொய்க்கால் குதிரை: திரைவிமர்சனம்!

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   06 , 2022  13:02:46 IST


Andhimazhai Image

இருதய நோயால் பாதிக்கப்பட்ட தன்னுடைய குழந்தையை ஒற்றைக் காலுடன் இருக்கும் தந்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே ’பொய்க்கால் குதிரை’ திரைப்படம்.

விபத்தில் தன்னுடைய காலை இழந்த பிரபுதேவா தன்னந்தனி ஆளாக  மகளை வளர்த்து வருகிறார். .மகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட மருத்துவமனையில் சேர்க்கிறார். பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் வால்வு ஒன்று கூடுதலாக வளர்ந்திருப்பது தெரியவருகிறது. அறுவை சிகிச்சை செய்ய எழுபது லட்சம் ஆகும் என மருத்துவமனை நிர்வாகம் கறாராகக் கூறிவிட, என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார் பிரபுதேவா.

சிறையில் இருக்கும் பிரபுதேவாவின் தந்தை, தொழிலதிபர் ஒருவரின் குழந்தையைக் கடத்த திட்டம் போட்டுக் கொடுக்கிறார். அதன்படி, குழந்தையைக் கடத்த களத்தில் இறங்கும் அவர் பல்வேறு உண்மைகளைக் கண்டுபிடிக்கிறார். இறுதியில், பிரபுதேவா தன்னுடைய குழந்தையைக் காப்பாற்றினாரா? இல்லையா? அவர் கண்டுபிடித்த உண்மை என்ன என்பதே படத்தின் மீதிக் கதை.

படம் தொடங்கியதுமே ஒற்றைக் காலில் நடனமாடி அசத்துகிறார் பிரபுதேவா. இந்த படம், அவரது நடிப்பிற்குத் தீனி போட்டிருக்கிறது. மருத்துவமனையிலிருந்து தன்னுடைய மகள் காணாமல் போனதும் வெகுண்டெழும் பிரபுதேவா, மருத்துவமனை நிர்வாகியைக் கேள்வி கேட்கும் காட்சிகள் அப்படியே கண்முன் நிற்கிறது. ஜெகன் நடிப்பிற்குப் பெரிய ஸ்கோப் இல்லை என்றாலும் அவரின் கதாபாத்திரம் படத்தில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்துகிறது. கொக்கேன் தான் வில்லன் என்று முன்கூட்டியே தெரிந்துவிடுவதால், கதையை எளிதாக யூகிக்க முடிகிறது. பிரகாஷ் ராஜ்,  வரலட்சுமி, ரைசா வில்சன் உள்ளிட்ட நடிகர்களும் கச்சிதமாக நடித்துள்ளனர்.


இடைவேளையில் சூடு பிடிக்கும் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் தான் அனல் பறக்கிறது. இன்னும் கொஞ்சம் வலுவான திரைக்கதைக்கு இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் கொஞ்சம் முயன்றிருக்கலாம்.

தனியார் மருத்துவமனைகளின் பணம் பிடுங்கித்தனத்தையும்,என்.ஜி.ஓக்களின் பணத்தாசையையும் இயக்குநர் எதார்த்தமாகக் காட்டியுள்ளார்.

சில இடங்களில் உயிர் கொடுக்கும் இமானின் பின்னணி இசை தனித்துவமாகத் தெரியவில்லை. பாடல்களிலும் புதுமை இல்லை.

படத்தின் இறுதிக் காட்சியில் நாயகனும் வில்லனும் சுழன்று ஆடும் ஆட்டமே படத்தைத் தாங்கிப்பிடிக்கிறது என சொல்லவேண்டும். 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...