???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி: ராகுல் குற்றச்சாட்டு 0 அயோத்தி வழக்கில் இறுதிகட்ட விசாரணை இன்று தொடக்கம்! 0 ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு 0 இன்ஸ்டாகிராமில் 3 கோடி பின் தொடர்பவர்களைப் பெற்ற பிரதமர் மோடி! 0 கீழடியில் ஆறாம் கட்ட ஆய்வு ஜனவரியில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 குப்பை அள்ளி மோடி விளம்பரம் தேடுகிறார்: திருநாவுக்கரசர் விமர்சனம் 0 சீமானை தேசதுரோக வழக்கில் கைது செய்க: காங்கிரஸ் மனு 0 மோடி அண்ணன் மகளிடம் வழிப்பறி செய்தவரைப் பிடிக்க களம் இறங்கிய 100 போலீஸ்! 0 இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவு: உலக வங்கி அறிக்கை 0 கோவையில் திருநங்கை போல் வேடமணிந்து வழிபறி செய்தவர்கள் கைது! 0 ஸ்டாலினால் அடுத்த முறை எம்.எல்.ஏ.கூட ஆக முடியாது: முதலமைச்சர் 0 இந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம் 0 தேசிய பங்குச் சந்தையில் முறைகேடு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 0 அமித்ஷாவை விமர்சித்த வழக்கு: ராகுல் காந்திக்கு ஜாமீன்! 0 மேலும் 150 ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அக்காவும் அம்மாவும் நடத்திய கவிதை நூல் வெளியீட்டு விழா!

Posted : வெள்ளிக்கிழமை,   ஏப்ரல்   13 , 2018  01:10:21 IST

அக்காவும் அம்மாவும் சேர்ந்து ஒரு இளம் கவிஞரின் முதல் கவிதை நூலை வெளியிடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வதெல்லாம் மிக அபூர்வமாக நடப்பது. அந்த அக்காவும் அம்மாவும் அந்த கவிஞருக்கு முகநூல் மூலமே அறிமுகமாகி அவரை தத்து எடுத்துக்கொண்டவர்கள் என்பது  நிகழ்ச்சியை மேலும் நெகிழ்வாக்கியது. அந்த அக்கா கோவையைச் சேர்ந்த யாழ்மொழி. அந்த அம்மா கோவையில் நூலகத்துறையில் பணிபுரியும் ராணி.
 
சென்னை தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் நேற்று  கவிஞர் கோ சாமானியன் எழுதிய சாஅய் என்கிற கவிதை நூல் வெளியீட்டு விழா நடந்தது. பெரும்பாலும் முகநூல் மூலம் அறிமுகமான கவிதை ஆர்வலர்கள், கவிஞர்களே இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். நுழைகையிலேயே கோவையைச் சேர்ந்த ராணி தயாரித்து எடுத்து வந்திருந்த அதிரசம், எள்ளுருண்டை ஆகியவை தேநீருடன் வழங்கப்பட்டன.
 
வழக்கமான நிகழ்வுக்கான எந்த ஒழுங்கும் இன்றி இதை நடத்துகிறோம் என்று அறிவித்தார் கவிஞர் சாமானியன் அக்கா என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த யாழ்மொழி. கடந்த ஆண்டு கவிஞனாக முகநூலில் தனக்கு அறிமுகமான சாமானியனின் அழகான கவிதைகள் பிடித்துப்போய் இந்த நிகழ்வுக்கு தானும் ராணியும் ஏற்பாடு செய்திருப்பதாக அவர் கூறினார்.
 
 
நிகழ்வில் மேடை ஏறிய அசோக் லேலண்டு நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி சத்தியசீலன், சாமானியனின் கவிதைகளின் வாசகராக அக்கவிதைகள் ஏற்படுத்தும் உணர்வுகள், சாமானியனுடனான நட்பு ஆகியவை பற்றி விவரித்து அழகான சில கவிதைகளையும் வாசித்தார். இந்நூல் வெளியீட்டு விழாவை தானே நடத்த விரும்பியதாகவும் ஆனால் அதற்குள் இவர்கள் முந்திவிட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
 
விழாவில் ஆரம்பத்தில் இந்நூலின் பதிப்பாளரான சந்தியா பதிப்பகம் நடராஜன் அழகானதொரு உரையை ஆற்றினார். நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் இளவரசு, எழுத்தாளர் பாமரன், கவிஞர் எஸ். சண்முகம், கவிஞர் ஜோ மல்லூரி ஆகியோர் கலந்துகொண்டனர். எழுத்தாளர் தீபாலட்சுமி தொகுப்புரை வழங்கினார்.
 
 
சண்முகம் பேசும்போது தன்னைப் போன்றவர்கள் கவிதை எழுத வந்த எண்பதுகளின் காலகட்டத்தையும் இப்போது கவிதைகளுக்குக் கிடைக்கும் வரவேற்பு பற்றியும் குறிப்பிட்டார். கவிதைகள்தான் தமிழின் முதன்மையான வெளிப்பாட்டு முறை என்பதையே நிறையே பேர் கவிதை எழுதுவதற்கான காரணமாக அவர் முன் வைத்தார்.
 
 
நடிகர் இளவரசு  வழக்கமான கலகலப்புடன் தன் உரையை நிகழ்த்தினார்.  ‘கவிதைகளை படித்துவிட்டு அதை பற்றிய வாசகர் விழா ஒன்றை 50 நாட்கள் கழித்து நடத்தவேண்டும். அப்போதுதான் இப்புத்தகத்தை யார் படித்திருக்கிறார்கள், எத்தனை பேரிடம் சென்றடைந்தது என்று தெரியவரும்,’ என்றவர் எழுத்தாளர் பாமரனை பற்றி பேசும் போது, “ தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சமூக சிந்தனைகளை பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறார். இந்த மாதிரி சமூக பிரச்சனைகளுக்காக போராடுபவர்கள் பொருளாதர சிக்கலை எப்படி சமாளிக்கிறார்கள், இந்த சமூகம் அவர்களுக்கு ஒன்றும் கொடுப்பதில்லை,” என்று பேசி முடித்தார்.
 
 
எழுத்தாளர் பாமரன் நான் நிறைய நேரம் தூங்கிக்கொண்டுதான் இருப்பேன், சிந்திப்பது குறைவு தான் என்று தன் வழக்கமான பாணியில் ஆரம்பித்தார்.  
 “இந்த சமூகம் கண்ணாடி மாதிரி ,நாம் கோபமாக பார்த்தால் கோபமாக பார்க்கும், அன்பாக பார்த்தால் அன்பை பார்க்கும். நான் சமூகத்தை அன்போடு பார்க்கிறேன், அது நிறைய அன்பை கொடுத்திருக்கிறது. சிறு வயதில் தந்தையை இழந்தவன் மனநிலை எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும், 22வயதில் நான் தந்தையை இழந்தவன். நான் ராஜீவ்காந்தி மாதிரி. இந்திராகாந்தி இறந்ததும் ராஜீவ்காந்திக்கு பிரதமர் பதவி கிடைத்தது போல், என் தந்தையின் வேலை எனக்கு கிடைத்தது. முதல் மாத சம்பளத்தை அம்மாவிடம் கொடுத்தபோது, அப்பா படத்திடம் வைத்து கும்பிடுப்பா என்றார். நான் பணம் எல்லாம் வேண்டாம் நீ தான்ப்பா வேண்டும் என்று அழுதேன்,” கூறிக்கொண்டே கண்ணீர் விட்டார்.  “கவிதையை எனக்கு பிடிக்கும் ஆனால் கவிஞர்களை தான் எனக்கு பிடிக்காது. நான் அணிந்துரை எழுதுவதில் எனக்கு பிரச்சனை இல்லை, நான் எழுதினேன் என்றால் நிறைய பேருக்கு பிடிக்காது, புத்தகத்தை வாங்கவும் மாட்டார்கள்,” என்றவர் இந்நூலில் இருந்து நிறைய கவிதைகளை பற்றி பேசினார். 
 
கவிஞர் ஜோ மல்லூரி தேன் தமிழில் தன் உரையை தொடங்கினார்.  “நான் ஏழு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து விலைமாதுகளை பற்றியும், திருநங்கைகளை பற்றியும் ஒரு புத்தகம் இந்த ஆண்டு வெளியிடப்போகிறேன். அதில் விடுபட்ட பல விசயங்களை  அஸ்வினி என்ற கவிதையில் திருநங்கைகளின் அவல நிலையை அற்புதமாக படைத்திருக்கிறார் கோ சாமானியன்.” என்றார் அவர்
 
நன்றியுரை ஆற்றிய யாழ்மொழி பெண்களால் நடத்தப்படும் இவ்விழாவிற்கு உதவிய அனைவருக்கும் நன்றி கூறி, குறிப்பாக இயக்குநர் மணிவண்ணனின் சகோதரி மேகலாவின் உதவி பெரியது என்றார். மேகலாவும் சில வார்த்தைகள் பேசினார். “ மணிவண்ணன் இப்போது இல்லை, ஆனால் பாமரன், இளவரசு, நடிகர் சத்தியராஜ் எனக்கு அண்ணன்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்..” என்றார் நெகிழ்வுடன்
 
ஏற்புரையை கவிஞர் கோ சாமானியன் பேசும்போது,  “எனக்கு என் தந்தையை ரொம்ப பிடிக்கும். இது என் தந்தை என்னுள் விதைத்தது. கவிதையை விட ஓவியங்கள் எனக்கு பிடிக்கும். ஆதி மனிதன் முதலில் ஓவியத்தை தான் வரைந்தான். பின்பு தான் மொழி வந்தது. ஓவிய கல்லூரியில் மூன்று ஆண்டுகள் படித்து வரையும் ஓவியனைவிட, தரையில் கால் ஊனம் உள்ளவர் வரையும் ஓவியம் அபாரமானது. அந்த ஓவியனுக்கும் அவன் வரையும் கடவுளுக்கும் இடையே இருக்கிறது என் வாழ்க்கை. இவ்விழாவை குடும்பவிழாவாக நடத்திக்கொடுத்த அனைவருக்கும் நன்றி,” எனக்கூறி உரையை முடித்தார்.
 
-இரா. சுதாகர்
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...