???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசு அடக்குமுறையை கடைபிடித்தால் போராட்டம் தொடரும்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு 0 வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருக்க திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் 0 ஐஸ்வர்யா ராயை மோசமாக சித்தரித்து டுவீட் செய்த விவேக் ஓபராய்: மகளிர் ஆணையம் நோட்டீஸ் 0 தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு 0 பொள்ளாச்சி விவகாரம்: சி.பி.ஐ. முன் நக்கீரன் கோபால் ஆஜர் 0 தமிழக வணிக வரித்துறையில் மத்திய அரசு அதிகாரிகள்: நாளிதழ் செய்தி 0 நம்பிக்கைக்குரிய மனிதர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி! 0 மெரினாவில் கடற்கரையில் ராட்டினம் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு 0 கோட்சே குறித்த விளக்க பொதுக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு! 0 இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு 0 சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை 0 தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு 0 வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து 0 "வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்": மமதா 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்?
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஏப்ரல்   23 , 2019  22:31:13 IST

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், பொன்பரப்பி கலவரம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் சமூக நல பிரிவு தலைவர் பாலு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

‘‘சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி எனும் ஊரில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவில் அருகே (வாக்குப்பதிவு மையத்தில் இருந்து 60 மீட்டர்) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காலை 11 மணி அளவில் வாக்களிக்க வருபவர்களை மோர் தருகிறோம் என்று கூறி பனையை காட்டி பிரசாரம் செய்துள்ளனர்.

அதே வாக்குச்சாவடிக்கு மாம்பலம் சின்னத்திற்கு வாக்களிக்கச் சென்ற வீர பாண்டியன் என்பவரை, ஊனமுற்றோர் என்றுகூட பாராமல் வழிமறித்து விசிகவினர் தாக்கியுள்ளனர்.

இதை தட்டிக்கேட்கச் சென்ற பாமக கட்சியினரை விசிக தொண்டர்கள் கல்லால் அடித்து உள்ளார்கள், அவர்களை விரட்டவே பமாகவைச் சேர்ந்த தொண்டர்கள் பொன்பரப்பி ஊருக்குள் துரத்தி சென்று விரட்டி உள்ளனர். அந்த வீடியோவை தான் விசிக திட்டமிட்டு பரப்பி வருகிறது.

பொன்பரப்பி சம்பவம் ஏற்பட்ட உடனே காவல்துறைக்கு தகவல் கிடைக்க, அவர்கள் 15 நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதனை படம்பிடித்த போது தான் தனியார் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் கலைவானன் என்பவர் விசிக கட்சியினரால் தக்கப்பட்டுள்ளார்.

தர்மபுரி இளவரசன் சம்பவம் முதல் பொன்பரப்பி சம்பவம் வரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், பாட்டாளி மக்கள் கட்சியை குறிவைத்து பொய் குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றனர்.

வெற்றி வாய்ப்பு இருந்தும் மோதல் ஏற்படக் கூடாது என்ற காரணத்திற்காக மட்டுமே சிதம்பரம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடவில்லை. கேட்டு இருந்தால் கூட்டணிக் கட்சி இடம் கொடுத்திருப்பார்கள். ஆனால் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறக் கூடாது என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே சிதம்பரம் மக்களவைத் தொகுதி விட்டு கொடுக்கப்பட்டது.

ஸ்டாலினை சந்திக்கும் வரை மௌனம் காத்த திருமாவளவன், ஸ்டாலினை சந்தித்த பின்பு போராட்டம் என்று அறிவிக்கிறார். இதனை வைத்துப் பார்க்கும் பொழுது பின்புலத்தில் ஸ்டாலின் இருந்து கொண்டு ஆளும் அரசுக்கு கலங்கம் விளைவிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் இவ்வாறு திட்டமிட்ட செயல்படுகிறார்.

திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை நவீன தீண்டாமை, அரசியல் தீண்டாமையுடன் தான் திமுக நடத்திவருகிறது. அதேநேரத்தில் அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே ஸ்டாலின் விசிகவை வைத்து இரட்டை வேடம் போட்டு வருகிறார்.

ஸ்டாலின் அரசியல் ஆதாயம் வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்க்காக மட்டும் தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுடன் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளார்.

பொன்பரப்பியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 நபர்களில் அமமுகவைச் சேர்ந்த மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பாமகவின் பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்க்காக மட்டுமே இந்தக் கலவரம் தூண்டப்பட்டுள்ளது’’ பாலு தெரிவித்துள்ளார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...