அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத்தியதா? அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம் 0 காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன் 0 தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர் 0 வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கி 0 நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு 0 ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குக: மு.க. ஸ்டாலின் 0 ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை? காங். எம்.பி கேள்வி 0 சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை: அமைச்சர் தகவல் 0 தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர் 0 “கொரோனா தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன்” - முதலமைச்சர் பழனிசாமி “கொரோனா 0 கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 0 தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி 0 மத்திய அரசு - விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி 0 பொங்கல்: உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை! 0 அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

’காப்பீடு செய்யப்படாத பயிர்களுக்கு அரசு உதவிகள் வேண்டும்’ – பாமக தலைவர் ராமதாஸ்

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   26 , 2020  04:27:17 IST

நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதோடு, காப்பீடு செய்யப்படாத பயிர்களுக்கும் அரசு உதவ வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தின் மற்ற பகுதிகளை விட கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மாவட்டம் முழுவதும் பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வாழை பயிர்கள் சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளன.

விழுப்புரம் மற்றும் காவிரி பாசன மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. பாதிப்புகளை சரி செய்யவும், சரி செய்ய முடியாத பயிர் சேதங்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாகவும், காப்பீடு செய்யப்படாத பயிர்களுக்கு அரசு உதவிகள் மூலமாகவும் போதிய இழப்பீடுகளை பெற்றுத் தரவேண்டும்’ எனக் வலியுறுத்தியுள்ளார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...