???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை கைது! 0 சலூன்கள், பியூட்டி பார்லர் செல்ல ஆதார் அட்டை கட்டாயம்: தமிழக அரசு 0 பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கkகோரி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு 0 சென்னையில் பைக்கில் 2 பேர் சென்றால் ரூ.500 அபராதம் 0 பொருளாதாரத்தை மோசமாக கையாளுகிறார் மோடி: ராகுல் காந்தி 0 இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும்: பிரதமர் மோடி உறுதி 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்தியாவை மிரட்டும் ராஜபக்சேவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் - ராமதாஸ்

Posted : சனிக்கிழமை,   மார்ச்   02 , 2013  03:36:14 IST

2009ம் ஆண்டு நடந்த இறுதிகட்ட போரில் விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களின்  12 வயது மகன் சுட்டு கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களை சேனல் 4  வெளியிட்டது , இந்த நிலையில் பாலச்சந்திரனை நாங்கள் சுட்டுக் கொல்லவில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்சே மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்  “விடுதலைப்புலி இயக்கத் தலைவர் பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன் சிங்களப்படையினரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதை அறிந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் துயரத்திலும், கொந்தளிப்பிலும் இருக்க, பாலச்சந்திரனை நாங்கள் படுகொலை செய்யவே இல்லை என்று கூறி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றிருக்கிறார் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே.

 

அதுமட்டுமின்றி இந்தியாவின் காஷ்மீரிலும் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை எதிர்த்து வாக்களிக்க வேண்டியது தனது கடமை என்பதை இந்தியா அறியும் என்றும் கூறியிருக்கிறார். அதாவது ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தால், காஷ்மீர் மனித உரிமை மீறல் குறித்து நாங்கள் பிரச்சினை எழுப்ப வேண்டியிருக்கும் என ராஜபக்சே மறைமுகமாக மிரட்டியிருக்கிறார். ராஜபக்சேவின் இந்தப் பேச்சு கண்டிக்கத்தக்கது. இதற்கு பிறகாவது ராஜபக்சேவின் உண்மை முகத்தை புரிந்து கொண்டு இலங்கை பிரச்சினையில் உறுதியான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கவேண்டும்.

 

ஆனால் சீனா பக்கம் சாய்ந்து விடக்கூடாது என்ற சொத்தைக் காரணத்தைக் கூறி இலங்கைக்கு சாதகமாகவே மத்திய அரசு நடந்து கொள்கிறது.ஈழத்தில் உள்ள தமிழர்களின் உடமைகளை பறித்துக் கொண்டு அவர்களை விரட்டியடிக்கும் வேலையில் இலங்கை அரசு ஈடுபட்டிருக்கும் நிலையில், அதற்கு ரூ.500 கோடியை நிதியுதவியாக அளித்திருக்கிறது இந்திய அரசு. ஈழத்தமிழர்களின் மறு வாழ்வுக்காக இந்தியா வழங்கும் நிதி முழுவதையும் சிங்களர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதற்காகவும், சிங்களப்படையினருக்கு சிறப்பு வசதிகளை செய்து தருவதற்காகவும் இலங்கை அரசு செலவழித்து வரும் நிலையில் அந்நாட்டிற்கு இந்தியா மேலும் மேலும் நிதி உதவி அளிப்பது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளை சிங்களமயமாக்கத்தான் பயன்படுமே தவிர, தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது.

 

அதேபோல், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டுவரும் விசயத்திலும் இலங்கைக்கு சாதகமாகவே இந்திய அரசு நடந்து கொள்கிறது. இந்த விசயத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் உறுதியளித்த மத்திய அரசு, மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தாமல் இருக்கவும், கருத்தொற்றுமை என்ற பெயரில் உப்பு சப்பில்லாத தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றவும் ஆதரவு திரட்டி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

 

இந்தியாவை மிரட்டும் இலங்கை அதிபர் மகிந்தா ராஜ பக்சேவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டுமே தவிர, அவருக்கு பணிந்து ரூ.500 கோடி பரிசு வழங்கக்கூடாது. எனவே இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிதி உதவியை ரத்து செய்வதுடன், இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வந்து நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...