???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்!- மருத்துவர் இராமதாசு 0 கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கித்தவிக்கும் 800க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்களை மீட்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் 0 கிரீமிலேயர் முறையை முற்றாகக் கைவிடுக!- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்! 0 தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதா? -முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி 0 எட்டு போலீஸார் கொல்லப்பட்ட சம்பவம்: உ.பி, ரவுடி விகாஸ் துபே கைது! 0 சின்னத்திரை படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம் 0 ஓ.பி.சி. கிரிமிலேயர் பிரிவை முடிவு செய்வதில் தற்போதைய நிலை தொடரவேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் கூட்டாட்சி, மதச்சார்பின்மை பாடங்கள் நீக்கம்! 0 அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் 0 தனபாலுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு 0 கொரோனா இன்று- தமிழகம் 3756 சென்னை 1261 0 கிரீமி லேயரை கணக்கிட சம்பளத்தை கருத்தில் கொள்ளக்கூடாது- ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்! 0 மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா! 0 எடப்பாடி பழனிசாமி இரவு, பகல் பாராமல் போராடி வருகிறார்: அமைச்சர் வேலுமணி 0 சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு ஏற்றது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

லட்சக்கணக்கில் பணம் இருக்கு! ஆனால் எடுக்க முடியல! அதிர்ச்சியில் உயிரிழக்கும் வாடிக்கையாளர்கள்!

Posted : சனிக்கிழமை,   அக்டோபர்   19 , 2019  02:33:23 IST


Andhimazhai Image
உங்களுக்கு வங்கியில் 80 லட்சம் பணம் உள்ளது. இதய சிகிச்சைக்கு நாள் குறித்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறீர்கள். சிகிச்சைக்குப் பணம் பெற வங்கிக்குப் போனால் அவர்கள் தர மறுக்கிறார்கள். என்ன ஆகும்? இப்படி எல்லாம் நடக்குமா என்கிறீர்களா? நடந்தே விட்டது. வங்கி வாடிக்கையாளர் மருத்துவமனையில் செத்தே போய்விட்டார்.
 
பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், இதய அறுவை சிகிச்சைக்கு தேவையான பணம் எடுக்க முடியாமல் மும்பையில் முரளிதர் தாரா என்பவர் உயிரிழந்துள்ளார்.
 
நிறுவனம் ஒன்றுக்கு கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றத்தைத் தொடர்ந்து, பிஎம்சி (பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி) நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேடாக கடன் பெற்ற நிறுவனத்தை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
 
இதனால் பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முதலில்  ஒரு வங்கி கணக்கிலிருந்து ரூ 1000 மட்டுமே எடுக்கமுடியும் என்ற கட்டுப்பாடு இருந்து அது பின்னர் 40,000 வரை உயர்த்தப்பட்டது.. இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டுமென வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மறுத்துள்ள நீதிபதிகள், மும்பை நீதிமன்றத்தை அணுகுமாறு தெரிவித்துள்ளனர்.
 
இத்தகைய சூழலில் வங்கி கணக்கில் இருக்கும் தங்களது பணத்தை அவசர மருத்துவ தேவைக்குகூட எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் கடுமையான இன்னலை சந்தித்து வருகின்றனர். இப்போது இதய அறுவை சிகிச்சைக்கு பணம் எடுக்க முடியாமல் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
 
83 வயதான முரளிதர் தாரா பிஎம்சி வங்கியில் 80 லட்சம் வரை வைப்பு வைத்திருக்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்ட முரளிதருக்கு அவசரமாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு தேவையான பணம் வங்கி கணக்கில் இருந்தும், உரிய நேரத்தில் அதனை எடுக்க முடியாமல் போனதால் தனது தந்தை இறந்ததாக அவரது மகன் பிரேம் தெரிவித்திருக்கிறார்.
 
பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்த பிறகு, இதன்காரணமாக நடைபெற்ற நான்காவது மரணம் இது என்பது மற்றொரு அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கிறது. ஏற்கனவே இருவர் பணம் முடக்கப்பட்ட மனவுளைச்சலிலும், மருத்துவ செலவுக்கு பணம் எடுக்க முடியாமலும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், பெண் மருத்துவர் ஒருவர் பணம் எடுக்க முடியாததால் தற்கொலை செய்துகொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வங்கியில் பணம் எடுக்க முடியாமல், முரளிதர் அறுவை சிகிச்சைக்கு பணம் திரட்ட அவரது குடும்பம் பல்வேறு முயற்சிகளை எடுத்திருக்கிறது. ஆனால், இறுதிவரை தேவையான பணம் கிடைக்காததால் முரளிதருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை. ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கான வழிகாட்டுதலில், மருத்துவ தேவைக்கு கூடுதலான பணம் எடுக்கலாம் என கூறப்பட்டபோதும் வங்கியில் அதை பின்பற்றவில்லை என கவலையுடன் கூறுகிறார் முரளிதரின் மகன் பிரேம்.
 
பாதிக்கப்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் தங்களால் ஆன அனைத்து வகையிலும் போராடி வருகிறார்கள். லட்சக்கணக்கில் பணம் இருந்தும் எந்த அவசர தேவைக்கும் பணம் எடுக்க முடியாத நெருக்கடி இது. சுமார் 6500 கோடி ரூபாய் வரை கடனை முறையின்றி ஹெடிஐஎல் என்ற நிறுவனத்துக்கு வங்கி நிர்வாகம் வாரி வழங்கிவிட்டது. இது  ஆர்.பி.ஐ விதிகளுக்கு முரணானது. அந்த நிறுவனம் கடனைத் திருப்பிச் செலுத்தும்நிலையில் இல்லாததால் வங்கிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...