???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு 0 சிறு, குறு தொழில்களுக்கு ரூ.20,000 கோடி: பிரகாஷ் ஜவடேகர் 0 ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் நிபந்தனை பிணை 0 தென்மேற்கு பருவமழை தொடங்கியது: சென்னையில் மழைக்கு வாய்ப்பு 0 காட் மேன் வெப்சீரிஸ் இயக்குநர், தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு! 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிரதமர் மோடி பதவியேற்பு விழா: ஸ்டாலின், ரஜினி, கமலுக்கு அழைப்பு!

Posted : செவ்வாய்க்கிழமை,   மே   28 , 2019  00:13:49 IST

மக்களவைத் தேர்தலில் கடந்த 30 ஆண்டுகளில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சியாக பாஜக சரித்திர சாதனை படைத்துள்ளது. டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில் நாளை மறுநாள் இரவு 7 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

மோடியுடன் அவரது புதிய அமைச்சரவை சகாக்களும் பதவியேற்க உள்ளனர். இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.இந்த விழாவில் கலந்துகொள்ள அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே சுமூக உறவு இல்லாத சூழலில் இதுவரை பாகிஸ்தானுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை. குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பிரதான கூட்டணி கட்சி என்ற முறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பதவியேற்பில் பங்கேற்கின்றனர். தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவருக்கு பதிலாக அக்கட்சியின் மக்களவை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், ஆ. ராசாவும் ஆகியோர் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...