???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தந்தை மகன் மரணம்: இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் 0 இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத உதவித் தொகை 0 உலகம் அழியப்போகல.. அழிச்சுக்கிட்டு இருக்கோம்: அறந்தாங்கி சிறுமியின் கொடூர சம்பவம் குறித்து ஹர்பஜன் 0 வன்கொடுமை செய்து படுகொலை: அறந்தாங்கி சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி 0 மேலும் 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று! 0 கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் பரிதாப மரணம்! 0 என்ஜினீயரிங் கல்லூரிகளில் வகுப்புகள் ஆகஸ்டு 16-ந்தேதி தொடங்கலாம்: ஏ.ஐ.சி.டி.இ. 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை நெருங்குகிறது! 0 பொதுத்தேர்வு குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது! 0 அரசாங்கத்தை விமர்சிப்பதிலிருந்து தன்னை எதுவும் தடுக்காது: பிரியங்கா காந்தி 0 தொடரும் என்.எல்.சி விபத்து: பாய்லர் வெடித்து 8 பேர் உயிரிழப்பு 0 தமிழகத்தில் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது 0 சாத்தான்குளம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட நால்வர் கைது! 0 சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: கொலைவழக்குப் பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும்: பிரதமர் நம்பிக்கை

Posted : சனிக்கிழமை,   நவம்பர்   16 , 2019  22:20:57 IST

நாடாளுமன்றக் குளிர் காலக் கூட்டம் நாளை தொடங்கி, டிசம்பர் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்த விவாதிக்க, மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லா டெல்லியில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினார்.

ஆளும் பாஜக அரசின் சார்பில், பிரதமர் மோடி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, இணையமைச்சர் அர்ஜுன் மேக்லால் ஆகியோர் கலந்துகொண்டனர். காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் அதிரஞ்சன் சௌத்ரி, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர் பாலு போன்ற, பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை குறித்து, குளிர்காலக் கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும், என பெரும்பாலான கட்சிகள், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தின. சென்னை ஐ.ஐ.டி மாணவி  ஃபாத்திமா லத்தீப் மரணம், மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை தொடர்பு மொழியாக ஆக்குவது, கல்வியை மாநில பட்டியலுக்கே கொண்டு வருவது போன்ற பிரச்னைகள் குறித்து, விவாதிக்க வேண்டும், என திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. கூட்டத்திற்குப்பின், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் எம்.பிக்களுடனான இந்த சந்திப்பு, அற்புதமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்து, நாட்டின் வளர்ச்சி குறித்த விவகாரங்களை விவாதித்து, எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும் என்றும் பிரதமர் மோடி  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...