அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தேவையற்ற பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாகும்: பிரதமர் மோடி

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   12 , 2021  10:55:54 IST

விண்வெளி பணிகள் தொடர்பான சாதனங்களை உருவாக்கி வரும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பாக இந்திய விண்வெளி சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சங்கத்தை, பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: 
 
'இந்தியா முன் எப்போதும் இல்லாத உறுதியான அரசாங்கத்தை பெற்றுள்ளது.  ஏனெனில் ‘தற்சார்பு இந்தியா’ என்ற அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வை தெளிவாக இருப்பதால் சீர்த்திருத்தங்கள் சாத்தியமாகின்றன. தேவையற்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதே இந்த அரசின் கொள்கை. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை வெற்றிகரமாக தனியார்மயமாக்கி உள்ளோம். இதே போல, தேவையற்ற பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும்.
 
தேச நலனையும், பல்வேறு பங்குதாரர்களின் தேவையை கருத்தில் கொண்டே, விண்வெளி முதல் பாதுகாப்பு துறை வரை பல துறைகளில் தனியாருக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று விண்வெளி துறையில் முழுமையான தொழில்நுட்பத்தை கொண்ட சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இனி அரசுகள் ஒரு கூட்டாளியாக இருந்து, தொழில் துறை, இளம் கண்டுபிடிப்பாளர்கள், புதிய நிறுவனங்கள் உருவாக தேவையான உதவிகளை தொடர்ந்து செய்யும். புதுமைகளை கண்டுபிடிக்க தனியார் துறைக்கு முழு சுதந்திரம் தருவது, இளைஞர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவது, சமானியனின் வளர்ச்சிக்கு உதவும் ஒரு வளமாக விண்வெளி துறையை பயன்படுத்துவது என்பதன் அடிப்படையில் விண்வெளி துறையில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.' இவ்வாறு அவர் பேசினார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...