???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை 0 வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் 0 அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி தேதி மாற்றம்

Posted : புதன்கிழமை,   ஜனவரி   01 , 2020  22:47:39 IST

பள்ளி மாணவர்கள் எந்தவித மன அழுத்தமும் இன்றி தேர்வுகளை எழுதும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக பிரதமர் மோடி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடலை நடத்தி வருகிறார். அந்தவரிசையில் இந்த ஆண்டும் வருகிற 16-ந்தேதி கலந்துரையாடல் நடத்துவதற்கு அவர் திட்டமிட்டு இருந்தார்.

இதில் கலந்து கொள்ளும் மாணவர்களை தேர்வு செய்வதற்காக 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சிறப்பு கட்டுரைப்போட்டி ஒன்றை நடத்தி இருந்தது. மேலும் இந்த கலந்துரையாடலுக்காக வருகிற 16-ந்தேதி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

ஆனால் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 16-ந் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், அன்றைய தினம் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன.

இதைப்போல மகர சங்கராந்தி, லோரி உள்ளிட்ட பண்டிகைகளால் வேறு பல மாநிலங்களிலும் 16-ந் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. எனவே அந்த மாநிலங்களை சேர்ந்த மாணவர்களை பங்கேற்க வைப்பதிலும் சிரமம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி வருகிற 20-ந் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...