???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை 0 சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை 0 தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று 0 சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? நீதிமன்றம் 0 சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம் 0 சொத்து வரி வசூலை 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் 0 கான்பூரில் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும்: பிரதமர் மோடி உறுதி

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   02 , 2020  22:34:22 IST

இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும் என்று பிரதமர் மோடி உறுதியுடன் தெரிவித்து உள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர், 'கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பல சீர்திருத்தங்களை செய்ய அரசு தீர்மானித்து இருக்கிறது.

பொருளாதாரத்தை வலுப்படுத்துவதை அரசு முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் நிச்சயமாக மீட்போம். விவசாயம், சுயதொழில் செய்வோர் நுட்பத்தால் பொருளாதாரம் மீளும். நாடு மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும். இந்திய தொழில்துறையின் மீது முழுநம்பிக்கை இருக்கிறது.

ஊரடங்கை அமல்படுத்தியதன் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி இருக்கிறோம். அதேசமயம் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தி பொருளாதாரத்துக்கு ஊக்கம் அளித்து வருகிறோம்.

ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பு துறை அல்லாத மற்ற துறைகளில் தனியாருக்கு அனுமதி அளித்து இருக்கிறோம். நிலக்கரி சுரங்கம், விண்வெளி, அணுசக்தி துறைகளில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. சுற்றுச்சூழல் துறையிலும் தனியார் பங்களிப்புக்கு வழிவகை செய்யப்படும்.

வருங்காலத்தில் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பதோடு தோல் பொருட்கள், காலணிகள் தயாரிப்பு, குளிர்சாதன எந்திரங்கள் தயாரிப்பு போன்றவற்றில் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...