???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு 0 டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போதுதான் வருகிறார்: கமல் 0 மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசுகிறார்: கார்த்தி சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் அரசியல் சதி: பிரதமர்

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   03 , 2020  21:17:37 IST

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்காக அரசியல்கட்சிகள் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. ஆளும் ஆம் ஆத்மி கட்சி அரவிந்த் கெஜ்ரிவாலை மட்டுமே முன்னிறுத்தி பரப்புரை மேற்கொண்டு வருகிறது. பாஜக சார்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இதனிடையே, டெல்லியில்  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி டெல்லி தேர்தலுக்கான தனது பரப்புரையை தொடங்கினார்.  அப்போது மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடையாமல் ஆம் ஆத்மி கட்சி தடுப்பதாகக் குற்றம்சாட்டினார். குடியுரிமை சட்டதிருத்தத்துக்கு எதிரான போராட்டங்களை காங்கிரசும், ஆம் ஆத்மியும் அரசியலாக்குவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். ஷாகீன் பாக், ஜாமியா போராட்டங்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் சாடினார்.

சீலம்பூர், ஜாமியா, ஷாகின் பாக் போராட்டங்கள் தற்செயலானவை அல்ல என்றும், நாட்டின் நல்லிணக்கத்தை குலைப்பதற்கான அரசியல் சதித் திட்டம் இதன் பின்னால் உள்ளதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.துல்லியத் தாக்குதலின் போது நமது ராணுவத்தின் வலிமையை சந்தேகித்தவர்கள் அதிகாரத்துக்கு வர வேண்டுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்தியாவை பிளவுபடுத்த துடிப்போருக்கே எதிர்க்கட்சிகள் உதவுவதாகவும் பிரதமர் மோடி தனது பரப்புரையின் போது புகார் தெரிவித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...