அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு! 0 கண்ணியம் குறையாமல் செயலாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 0 இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக அரசுதான்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 0 ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் அதில் நடிக்க மாட்டேன்: நடிகர் சரத்குமார் பேச்சு! 0 'பொன்னியின் செல்வன்' 3 நாட்களில் ரூ.200 கோடி வசூல்! 0 அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு 0 மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை 0 அக்டோபர் 11-ல் விசிக நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: திருமாவளவன் அறிவிப்பு 0 புதிய காங்கிரஸ் தலைவர் 'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்க மாட்டார்: சசி தரூர் 0 இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றுபட்டு காக்க வேண்டும்: கேரளா சிபிஎம் மாநாட்டில் முதலமைச்சர் 0 முன்னாள் சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார் 0 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்க கேரள சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்! 0 பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்! 0 தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்கள்: மனைவி ஜோதிகா குறித்து சூர்யா நெகிழ்ச்சி! 0 காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி: மல்லிக்கார்ஜுன கார்கே வேட்புமனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

எதிர்க்கட்சிகள் மீதான ரெய்டுகளுக்கு பிரதமர் மோடி காரணமில்லை: மம்தா

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   21 , 2022  10:06:18 IST

மத்திய அமைப்புகளின் வரம்பு மீறிய நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கு வங்க சட்டப் பேரவையில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தீர்மானம் கொண்டு வந்து அதை நிறைவேற்றியுள்ளார். இந்த தீர்மானம் குறித்து பேசும் போது மம்தா பேசிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்மானம் குறித்து கூறிய அவர், "தற்போதைய மத்திய அரசு சர்வாதிகார போக்கில் செயல்படுகிறது. இந்த தீர்மானம் தனிப்பட்ட நபர்கள் யாருக்கு எதிரானது அல்ல. மத்திய அமைப்புகள் பாரபட்சத்துடன் செயல்படுவதை உணர்த்தவே இந்த தீர்மானம். பிரதமர் மோடி தான் மத்திய அமைப்புகளை துஷ்பிரயோகம் செய்து மாநில அரசுக்கு எதிராக ஏவிவிடுகிறார் என நான் நம்பவில்லை.
 
பாஜகவின் ஒரு சில தலைவர்கள் தான் தங்கள் சுயநலத்திற்காக இதன் பின்னணியில் இருப்பார்கள் என நினைக்கிறேன்.சிபிஐ அமைப்பு பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கைகளை முறையாக தாக்கல் செய்வதில்லை. இந்த விஷயம் பலருக்கு தெரியாது. இந்த அமைப்புகளின் செயல்பாட்டால் தொழிலதிபர்கள் நாட்டைவிட்டு ஓடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது" என்று பேசினார்.
 
சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் நேரடியாக சாடி வரும் நிலையில், மம்தாவின் இந்த திடீர் மாற்று கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...