???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி 0 வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 0 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு 0 தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு 0 போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு 0 கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 0 இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு 0 மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு 0 குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு! 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜனவரி   26 , 2020  20:08:56 IST

எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது. ஆயுதங்களை தூக்கியவர்கள், தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் என்று வானொலி உரையில் பிரதமர் மோடி கூறினார். மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய அவர்,

'குடியரசு தினத்தையொட்டி, அனைத்து குடிமக்களுக்கும் வாழ்த்துகள். குடியரசு தின கொண்டாட்டத்தால், இந்த நிகழ்ச்சியின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது.

2 வாரங்களுக்கு முன்பு, நாடு முழுவதும் பொங்கல், லோஹ்ரி, பிஹு போன்ற பண்டிகைகளை கொண்டாடிக்கொண்டிருந்தபோது, 25 ஆண்டு கால புரு ரியாங் அகதிகள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

புரு ரியாங் அகதிகள், தங்கள் பாதி வாழ்நாளை அகதிகள் முகாம்களில் கழித்த சூழ்நிலை, மிகவும் கவலைக்குரியது. அதையும் மீறி அவர்கள் இந்திய அரசியல் சட்டம் மீது நம்பிக்கை வைத்தனர். அவர்களின் துயர அத்தியாயம் இறுதியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அவர்களது மறு குடியமர்வுக்கு மத்திய அரசு ரூ.600 கோடி செலவளிக்கும்.

வன்முறை பாதையை நோக்கி திசை திரும்பியவர்கள், அமைதி மீது நம்பிக்கை தெரிவித்து, நாட்டின் முன்னேற்றத்தில் தங்களையும் பங்குதாரராக இணைத்துக்கொண்டுள்ளனர். அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதால், வடகிழக்கு பகுதியில் கிளர்ச்சி குறைந்துள்ளது.

ஆகவே, எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது. வன்முறையையும், ஆயுதங்களையும் கையில் எடுத்தவர்கள், தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்' என பிரதமர் மோடி பேசினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...