???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் 0 பஞ்சாப் ரயில் விபத்து: 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு 0 சபரிமலை விவகாரம்: 3 மாநிலங்களுக்கு உள்துறை எச்சரிக்கை 0 பெண்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதில் பாதுகாப்பு இல்லை: நடிகர் சிவக்குமார் 0 உலகம் உள்ள வரை வடகலை, தென்கலை பிரச்னை தீராது: நீதிமன்றம் சொல்கிறது! 0 போராட்டம், கலவரங்களை கடந்து 18 படிகளில் ஏறினார் பெண் பக்தை 0 #MeToo எதிரொலி: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா 0 சபரிமலையில் பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: பத்திரிக்கையாளர்கள் சங்கம் கண்டனம் 0 தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் 0 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஸ்டாலின் ஆலோசனை! 0 சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு! 0 கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு 0 இந்தியாவின் "ரா" உளவு அமைப்பு என்னை கொலை செய்ய சதி: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு 0 சபரிமலை செல்பவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்: பினராயி விஜயன் உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 90 சதவீதம் தேர்ச்சி!

Posted : வியாழக்கிழமை,   மே   07 , 2015  00:41:30 IST


Andhimazhai Image

மார்ச் 5 ஆம் தேதி துவங்கிய பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 31 ஆம் தேதி முடிவடைந்தன. மொத்தம் 8 லட்சத்து 86 ஆயிரத்து 27 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கையே அதிகம். இவர்கள் தவிர 42,963 பேர் தனித்தேர்வு எழுதி உள்ளனர்.

தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அரசு தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் சென்னையில் இன்று வெளியிட்டார். அப்போது தமிழகத்தில் 90.6 சதவீதம் பேர் தேர்வு பெற்றுள்ளனர்.

தமிழை முதன்மை பாடமாக எடுத்துப் படித்த திருப்பூர் விகாஸ் வித்யா மெட்ரிக் பள்ளி மாணவி பவித்ரா, கோவை நிவேதா ஆகிய இருவரும் 1200க்கு 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்கள்.தமிழகத்தில் 90.6 சதவீதம் பேர் தேர்வு பெற்றுள்ளனர். மாணவிகள் 93.4 சதவீதமும், மாணவர்கள் 87.7 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார். 1190 மதிப்பெண்கள் பெற்று 4 பேர் இரண்டாம் இடம் பிடித்தனர். ஈரோடு மாவட்ட விக்னேஸ்வரன், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீண், திருச்சியைச் சேர்ந்த மாணவர் சரண்ராம் ஆகியோர் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். நாமக்கல் மாவட்டம் டிரினிட்டி அகாடமி மாணவி பாரதி 1189 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 90.6 சதவிகிதம் கடந்த ஆண்டும் இதே தேர்ச்சி விகிதமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 87.5%. மாணவிகள் தேர்ச்சி விகிதம் 93.4%. இந்த ஆண்டும் வழக்கம்போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள

http://tnresults.nic.in/



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...