???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்!

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   13 , 2018  22:51:32 IST

தமிழகத்தில் வரும் ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது. இந்தத் தடையை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கலுக்கு தமிழக அரசு தீர்வுகாண வேண்டும் என்று வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை வரும் 1-ம் தேதி முதல் பயன்படுத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வர இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தத் தடை என்பதை அரசு தெளிவாக அறிவிக்காததால் வணிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
 
அதேநேரத்தில், சர்வதேச நிறுவனங்கள் உற்பத்தி செய்யக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படவில்லை என வணிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 2020-ம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படாத நாடாக இந்தியாவை மாற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதைப் போல், தமிழக அரசும் கால அவகாசம் வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்.
 
6 மாத அவகாசத்தில், பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை அமல்படுத்துவது சாத்தியமில்லாதது எனக் குறிப்பிடும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், அதிக முதலீடு செய்து பிளாஸ்டிக் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலையை இழக்க நேரிடும் என சுட்டிக்காட்டினார்.
 
அரசு திடக்கழிவு மேலாண்மையை சரிவர கையாண்டு போதிய கால அவகாசம் வழங்கினால் யாரும் பாதிக்காத வகையில் பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தை உருவாக்கிட முடியும் என வணிகர்களும், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களும் குறிப்பிடுகின்றனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...