அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக நாடுகளில் ஆராய்ச்சிப் பணியும் வாய்ப்புகளும்- -முனைவர் விஜய் அசோகன், ஆராய்ச்சியாளர், அயர்லாந்து 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி 8.10 சதவீதமாக குறைப்பு

Posted : சனிக்கிழமை,   மார்ச்   12 , 2022  15:46:40 IST

2021-22ம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.50 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதமாக குறைத்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் மத்திய வாரிய குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

1977-78-ம் ஆண்டிற்கு பிறகு தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் இம்முறை குறைந்துள்ளது. ஏற்கனவே, 2020-21ம் ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு டெபாசிட்டுகளுக்கான 8.5 சதவீத வட்டி விகிதம் மார்ச் 2021ல் மத்திய அறங்காவலர் வாரியத்தால் முடிவு செய்யப்பட்டது. கடந்த அக்டோபர் மாதத்தில் 2020-21ம் ஆண்டிற்கான வட்டி வருமானத்தை 8.5 சதவீதத்தில் சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்க கள அலுவலகங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

 

மத்திய அறங்காவலர் வாரியத்தின் முடிவுக்குப் பிறகு, 2021-22க்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் ஒப்புதல் பெற நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படுகிறது. நிதி அமைச்சகம் மூலம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே வைப்பு நிதி வட்டி விகிதத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...