அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை - திருச்சி சிவா பேட்டி! 0 அதிமுக கூட்டணி: தேமுதிகவிற்கு 13 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவா? 0 சட்டசபைக்கு குதிரையில் வந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ! 0 வைரலாகும் சிம்புவின் ஒர்க் அவுட் வீடியோ! 0 ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு! 0 கொங்குநாடு மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள்? 0 திமுக கூட்டணியில் இடம்பெறுகிறாரா கருணாஸ்? 0 சட்டமன்றத் தேர்தல்: தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் வாக்குப் பதிவு எந்திரங்கள்! 0 ஆண்கள் தினத்தையும் கொண்டாட வேண்டும் - பாஜக எம்பி! 0 பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது - விசிக! 0 திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்! 0 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது: சென்னை மாநகராட்சி! 0 அப்துல் கலாம் மூத்த சகோதரர் முகமது முத்து மரைக்காயர் மறைவு 0 பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு: நாடாளுமன்றம் இன்று கூடியது 0 துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

செவ்வாயில் உயிர்வாழ்க்கையை ஆராயும் நாசாவின் ரோவர் கருவி ! வெற்றிகரமாகத் தரை இறங்கியது!

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   19 , 2021  09:03:53 IST


Andhimazhai Image

செவ்வாய் கோளின் மேற்பரப்பில்  நாசா அனுப்பிய  ரோவர்  கருவி வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது.

 

இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.25 மணிக்கு இந்த கருவி செவ்வாயில் தரை இறங்கியது.

 

பெர்செவெரன்ஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வுக்கருவி செவ்வாயின் மேலே முன்பொரு காலத்தில் ஓடி வறண்டுபோன ஜெசரோ என்ற பள்ளத்தின் மேல் இறக்கப்பட்டுள்ளது.

 

இது முன்னொரு காலத்தில் இங்கு படிந்துள்ள படிவுகளை ஆராய்ந்து, அங்குள்ள பாறைகளின் அமைப்பு, உயிர்களின் படிமங்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதுடன், அங்கே தோண்டி எடுக்கப்படும் மாதிரிகளை மீண்டும் பூமிக்குக் கொண்டு வரும் எதிர்கால முயற்சிகளுக்கும் இந்த ஆய்வுக்கருவி பயன்பட உள்ளது.

 

இரண்டு ஆண்டுகளுக்கு இந்த கருவி செவ்வாயில் ஆய்வுகள் செய்வதுடன் படங்கள் எடுத்து அனுப்பும். ஆறுசக்கரங்கள் கொண்டது இது. இத்துடன் ஒரு ஹெலிகாப்டர் கருவியும் உள்ளது. இதுவும் செவ்வாய் மீது பறந்து ஆய்வு நடத்தும்.

 

203 நான்கள் பயணம் செய்து 472 மில்லியன் கிமீ தூரம் கடந்து செவ்வாயில் இறங்கி இருக்கும் இந்த கருவி. நாசா அனுப்பி இருக்கும் இரண்டாவது ரோவர் ஆய்வுக்கருவி.

 

செவ்வாயின் மேற்பரப்பை இது வெற்றிகரமாக சென்றடைந்த பின்னர் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இருக்கும் நாசா கட்டுப்பாட்டு அறையில் பொறியாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த கருவி சேமித்து வைக்கும் மாதிரிகளை இன்னும் பத்தாண்டுகளில் அமெரிக்க- ஐரோப்பிய கூட்டு முயற்சியில் செல்லும் விண்கலன்கள் மூலம் பூமிக்கு எடுத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...