???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் 0 தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு 0 மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின 0 விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை 0 மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் 0 அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா? வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் 0 வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது! 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பெரியார் மீது அவதூறு ட்வீட்: அரசியல் தலைவர்கள் பதிலடி

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   24 , 2019  08:52:18 IST


Andhimazhai Image

பெரியாரின் நினைவு நாளான இன்றைய தினத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ட்விட்டர் கணக்கில் அவரைப் பற்றிய அவதூறான கருத்து பதிவானது. இதற்கு பாஜகவின் கூட்டணிக் கட்சியான பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,  அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், உள்ளிட்ட தலைவர்களே கண்டனம் தெரிவித்தனர்.  திமுக தலைவர் மு.க ஸ்டாலின், திமுக இளைஞரணி  செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமமுக  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் கூட கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

இதுதொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ”தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவர் குறித்து தமிழக பாரதிய ஜனதாக் கட்சியும், அதன் ஐ.டி. பிரிவும்  டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து அருவருக்கத்தக்கது. இது அவர்களின் காமாலைக் கண்களைக் காட்டுகிறது. இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது” என்று ட்வீட் செய்தார்.

 

இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் “சமூக சீர்திருத்தவாதி பெரியாரை கொச்சைப் படுத்தியது தவறு. இது கண்டத்திற்குரிய செயல்’ என்று தெரிவித்தார்.

 

பிறகு கூட்டணிக் கட்சிகளின் கருத்தை ஏற்று சர்ச்சைக்குரிய ட்வீட்டை பாஜக நீக்கிவிட்டாலும் அந்த கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அக்கட்சியின் ஐடி பிரிவு செயலாளர் நிர்மல் குமார் கூறி உள்ளார்.

 

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ட்விட்டர் பதிவில் ‘பெரியாரை இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது பாஜக. அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே? அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்!அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா?” என்று பதிவிட்டுள்ளார்.

 

உதயநிதி ஸ்டாலினும் களமிறங்கி, ‘பெரியார் எனும் சுயமரியாதை அரக்கனை இந்த சனாதன சாக்கடைகளால் ஒன்றும் செய்துவிடமுடியாது. ஆனாலும் பாஜவின்  வக்கிரத்தைக் கண்டுகூட ஆளும் அடிமை அதிமுக அரசு அமைதிகாக்கிறது. பதவிக்காகப் பெரியாரைக்கூட இழக்கத் துணிந்துவிட்டீர்களா?’’ என்று கேட்டுள்ளார்.

 

இதுதொடர்பாக அமமுக  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ‘ சர்ச்சை எழுந்தவுடன் அந்த பதிவு நீக்கப்பட்டுவிட்டாலும் எதிர்காலத்தில் இத்தகைய சூழல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு பாரதிய ஜனதா கட்சி தலைமைக்கு இருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...