செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம்
பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம்
Posted : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 07 , 2021 12:12:45 IST
பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி அரசியல் கட்சியினர் , தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
சிறையில் இருந்து விடுவிக்க கோரி பேரறிவாளன் தரப்பில் இருந்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
முன்னதாக, பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி பேரறிவாளன் விவகாரத்தில் விடுதலை செய்யக்கோரிய தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது முடிவெடுக்க ஆளுநர் நீண்ட காலம் எடுத்துக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கில் மத்திய அரசு இனியும் தாமதிக்கக் கூடாது எனத் தெரிவித்ததுடன் வழக்கை அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
|