அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பேரறிவாளனுக்கு 6ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு!

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   27 , 2021  11:02:45 IST

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், அவரின் தாயார் அற்புதம்மாள் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு தொடர் சிகிச்சை மேற்கொள்ள பரோல் வழங்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்திருந்தார்.
 
அந்த மனுவின் பேரில் கடந்த மே மாதம் 28ஆம் தேதி பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து 5 மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பரோலை மேலும் நீட்டிக்கக்கோரி அற்புதம்மாள் மனு அளித்திருந்தார்.
 
அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு மீண்டும் 6ஆவது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. பரோல் வழங்கப்பட்டதையடுத்து,பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் உள்ள அவரின் வீட்டில் இருந்து வருகிறார்.
 
கடந்த வாரம், சிறுநீரக தொற்றுக்காக, சிடி ஸ்கேன் எடுப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் அடுக்கம்பாறை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பேரறிவாளன் அழைத்து வரப்பட்டார். அங்கே அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர், மீண்டும் அவரது இல்லத்திற்கே அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...