![]() |
சிறுநீரக தொற்று, நீரிழிவு சிகிச்சைக்காக பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதிPosted : சனிக்கிழமை, நவம்பர் 28 , 2020 07:17:28 IST
பரோலில் விடுவிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சிறுநீரக தொற்று, நீரிழிவு சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேரறிவாளனின் உடல்நிலையை கருத்தில்கொண்டு அவருக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக இன்று அவர் விழுப்புரத்தில் உள்ள மருத்துவமனை அழைத்துவரப்பட்டார். பின்னர் சிகிச்சைக்காக பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
|
|