???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்! 0 தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை 0 தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்! 0 இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? ஹாரி விளக்கம்! 0 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 0 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் 0 தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 0 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? அமைச்சர் மறுப்பு 0 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி! 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பேரன்பு: சொல்லப்படாத வாழ்க்கை

Posted : வியாழக்கிழமை,   பிப்ரவரி   07 , 2019  04:53:25 IST


Andhimazhai Image

எப்போதும் ராம் எடுக்கும் திரைப்படங்கள் வித்தியாசமானவை. மிக உக்கிரமான காட்சிகளால் நிரம்பியவை. பேரன்பும் அதற்கு விதி விலக்கு இல்லை. மிக முக்கியமான, தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, பொதுவெளியில் எங்குமே பேசப்படாத,  ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதை மிக அழகாக, உணர்வுபூர்வமாக, அதே சமயம் தனக்கே உரிய சில அதிர்ச்சி வைத்தியங்களைக் கலந்து கொடுத்திருக்கிறார் ராம்.

 

படத்தை இரண்டாகப் பிரிக்கலாம். கொடைக்கானலில் ஏரிக்கரை ஓரத்தில் இருக்கும் தனிமையான வீட்டில் நிகழும் பகுதி முதலாவது. அந்த வீடும் அதன் தனிமையும் பேரன்பு படத்தில் மிகமுக்கியமான பாத்திரங்கள். ஏரியின் மீது படரும் பனியும்  பொழுது விடிந்து பனி விலகிச்செல்லும் காட்சியும் இரவில் மின்சார இணைப்பே இல்லாத அந்த வீட்டின் காட்சியும் அழகு என்ற சொல்லில் மட்டும் அடக்கிவிட முடியாதவை. ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வருக்கு மிகப்பெரிய பாராட்டை அளிக்கலாம். இந்த அழகான இடத்திலேயே இன்னும் கொஞ்சநேரம் படம் தொடராதா என்று நினைத்தால் அநியாயமாக படம் மீண்டும் சென்னை என்கிற பெருநகருக்குள் வந்துவிடுகிறது.

 

இங்கே விரியும் காட்சிகள் இரண்டாவது பகுதி. மூளை முடக்குவாதம் என்பதைப் பற்றி கொஞ்சம் விளக்கமாக அறிந்துகொள்ள வைக்கும் காட்சிகள்.  இடையே மனித உணர்வுகளை உச்சகட்டமான, உயர்தரமான காட்சி மொழி மூலம் ராம் கடத்திச் செல்கிறார்.  மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மகளை விட்டுவிட்டுச் சென்றுவிட்ட தன் மனைவியைக் காணச்செல்கிறார் மம்முட்டி. தன்னால் அவளைப் பார்த்துக்கொள்ள முடியவில்லை. கைவிட்டுச் சென்ற மனைவியிடமாவது உதவி கேட்கலாம் என்று. புதிய கணவன் வரவேற்க, தேநீர் அளிக்கிறாள் பழைய மனைவி. அவளது முகமே படத்தில் காண்பிக்கப்படுவதில்லை. புதிதாக அவர்களுக்குப் பிறந்த குழந்தையின் அழுகுரல் கேட்கிறது.’குழந்தை நன்றாக இருக்கிறது. எந்தஉடல் பிரச்னையும் இல்லை’ என்கிறார்.  அவ்வளவுதான். மம்முட்டி எழுந்து வந்துவிடுகிறார். இந்த காட்சிக்கு இணையான ஒன்றை தமிழ் சினிமாவில் வைக்க மீண்டும் ராம் வந்து செய்தால்தான் உண்டு. மம்முட்டியை விட்டுவிட்டு அவர் மனைவி விலகிச் சென்று மணந்திருக்கும் கணவன் சற்று கறுப்பாக, குண்டாக, அழகற்று(!) இருக்கிறார். இதெல்லாம் போகிற போக்கில் கவனத்துக்கு வருகிறவை. இவையெல்லாமும் படம் பார்க்கும்போது நமக்குள் உருவாக்கும் அழுத்தமும் புரிதலும் முக்கியமானவை.

 

 மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பாப்பா என்கிற பெண்ணின் பாலியல் உணர்வுகளைப் பேசும் இரண்டாம்பகுதி நடக்குமிடமாக குளிரான கொடைக்கானலை விட்டு பரபரப்பான, நெருக்கடி மிகுந்த சென்னைக்கு மாறியதுவே அச்சிக்கலை மேலும் அழுத்தமாகப் பதிய வைக்கிறது. ஒரு நிகழ்வைக் காண்பிக்கும் நிலப்பரப்பும் முக்கியமானதுதானே..

 

மம்முட்டி நன்றாக நடித்திருக்கிறார். பாப்பாவாக வரும் சாதனா அற்புதம் என்றெல்லாம் சொல்வது இங்கே தேவை இல்லை. இது பேரன்பு. அஞ்சலிக்கு மம்முட்டிக்கும் திருமணமாகி விடுகிறது. அஞ்சலியின் கணவனை அவன்தான் கணவன் என்று தெரியாமல்  கூட்டி வந்துவிடுகிறார். இரவில் அவனைப் படுக்கையில் படுக்க வைத்து மம்முட்டி அஞ்சலி எவ்வளவு நல்ல பெண் தெரியுமா என்று புகழ்ந்து வர்ணித்துப் பேசிக்கொண்டே போக, அவன் படுக்கையில் இருந்தவாறே உம்… உ ம்… என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். மம்முட்டி பேசி முடித்து தூங்கிவிட்ட பின்னும் நெடு நேரம் அவன் உம் கொட்டிக்கொண்டிருக்கிறான்.  அவர் உறங்கிய பின் எழுந்து அந்த இரவை வெறித்தவாறு ஒரு சிகரெட்  பற்ற வைக்கிறான். வேறெதுவும் இல்லை. அச்சூழலின் கனத்தை எந்த மெலோ டிராமா காட்சிகளோ வசனங்களோ இல்லாமல் கடத்துகிற திறமைக்காக ராமை பாராட்ட வேண்டியதெல்லாம் இல்லை. ராமின் படம் இப்படித்தான் இருக்கவேண்டும்.

 

தன் மகளின் பாலியல் இச்சைக்காக ஆண் விபசாரி தேடும் மம்முட்டி என்கிற ஒரு காட்சி வருகிறது. இந்த இடத்தில் தியேட்டரில் பலர் சீட்டில் நெளிகிறார்கள். ஏன் இது? இவ்வளவு தூரம் போகவேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. ராம் படத்துக்கு வந்திருக்கிறாய். இந்த அளவுக்குக் கூட நெளியாவிட்டால் எப்படி? என்று சமாளித்துக்கொள்கிறோம்.

 

திருநங்கையாக வந்திருக்கும் அஞ்சலி அமீர் பாத்திரமும் அழகு. அவரது பேரன்பில் அமுதவன் என்கிற மம்முட்டி அடைக்கலாமாக, நாம் நிம்மதியுடன் வெளியேறுகிறோம்.

 

பேரன்பு சொல்வது நாம் அறிந்திராத, அறிந்தாலும் விலகி ஓடுகிற ஒரு வாழ்க்கை.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...