???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொழிற்நுட்ப கோளாறு: சந்திரயான்-2 தற்காலிக நிறுத்தம் 0 காங்கிரஸ் தலைவர்களால் அச்சுறுத்தல்: கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காவல்துறைக்கு கடிதம் 0 புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய திமுக சார்பில் ஆய்வுக்குழு அமைப்பு 0 ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை 0 புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சித்த நடிகர் சூர்யாவுக்கு ஹெச். ராஜா கண்டனம் 0 அத்திவரதரை வழிபடுவதற்கான நேரத்தை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த் 0 உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடவேண்டும்: குடியரசுத் தலைவர் 0 அஞ்சல்துறைத் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை! 0 இந்தித் திணிப்பில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு மாறாது: கமல்ஹாசன் உறுதி 0 ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 ஸ்விக்கி தலைமை பொறுப்பாளராக தமிழகத்தை சேர்ந்த திருநங்கை நியமனம் 0 தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் 0 சென்னை மண்ணடியில் உள்ள வஹாபி இஸ்லாம் அலுவலகத்தில் என்.ஐ.ஏ. சோதனை 0 எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு அனுமதி: மு.க. ஸ்டாலின் கண்டனம் 0 நடமாடும் டாஸ்மாக் வேண்டும்: எம்.எல்.ஏ. தனியரசு கோரிக்கை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்திய விவசாயிகளின் உரிமைகளை கேள்விக்குறியாக்கும் பெப்சியின் வழக்கு!

Posted : சனிக்கிழமை,   மே   11 , 2019  05:02:30 IST


Andhimazhai Image
சமீபத்தில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த இந்திய விவசாயிகள் பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் அடாவடியான வழக்கால் நெறிக்கப்பட்டனர். லேஸ் சிப்ஸ்(Lays) வகை உருளைக்கிழங்குகளை பயிர் செய்ததற்காக 5 விவசாயிகள் தலா 1.5 கோடி அபராதம் செலுத்த வேண்டுமென பெப்சி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
 
ஏற்கனவே பல்வேறு வாழ்வாதார சிக்கல்களை சந்தித்துவரும் இந்திய விவசாயிகளுக்கு இப்படியான வழக்கு மிகவும் புதிது. நாடு முழுவதிலுமிருந்து கடும் கட்டணத்துக்குள்ளான இந்த அராஜக போக்கிலிருந்து பெப்சி நிறுவனம் இப்போது பின்வாங்கியிருக்கிறது. அகமதாபாத் வணிக நீதிமன்றத்தில் தொடர்ந்த குறித்த வழக்கை பெப்சி திரும்பப்பெற்றிருக்கிறது. ஒருவகையில் இது விவசாயிகளுக்கு வெற்றிதான் என்றாலும், இந்த விவகாரத்தில் அரசின் மௌனம் விவசாயிகளை அதிருப்தியடைய செய்திருக்கிறது. மேலும், பெப்சி நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுமென விவசாயிகள் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
 
விதை சேமிப்பு மற்றும் பயிர் உற்பத்தியில் உள்நாட்டு விவசாயிகளுக்கு இருக்கும் தார்மீக உரிமையை தட்டிப்பறித்து ஆதிக்கம் செலுத்தும் பன்னாட்டு நிறுவனத்தின் நடவடிக்கையை சாதாரணமாக கருதக்கூடாது என்கின்றனர் விவசாயிகள் பாதுகாப்புக்கான இயக்கத்தினர்.
 
வலுவான எதிர்ப்புகள் எழுந்திருக்கவிட்டால் இந்த விவகாரத்தில், பெப்சி நிறுவனத்தால் இந்திய விவசாயிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கப்பட்டிருப்பார்கள். விவசாயிகள் ஆதரவு இயக்கங்கள், விவசாய சங்கங்கள் மட்டுமே பெப்சியின் இந்த நடவடிக்கையை எதிர்த்தனர். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு விவசாயிகளின் உரிமையை உறுதி செய்திருக்க வேண்டுமென்கிற வாதமும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
 
பயிர் வகைகள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை அதிகராச் சட்டம் 2001-ன்படி, விவசாயிகளுக்கு பயிர்கள் மற்றும் விதைகள் மீதான உரிமையை நிலைநிறுத்த வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் அராஜக மிரட்டல் போக்கை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டுமென்பது தற்போது விவசாயிகள் தரப்பின் கோரிக்கையாக உள்ளது. வழக்கை திரும்பப்பெற்றிருந்தாலும் விவசாயிகளிடம் பெப்சி நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென்பது அவர்களது மற்றொரு முக்கிய கோரிக்கை.

English Summary
Pepsico case collapse indian farmers rights

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...