???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ”ஐம்பதாண்டுகளுக்கு முன்பு புதையுண்டு போன ஒரு உண்மை வரலாறு” - படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 16 0 ஐந்து லட்சமும் திமுக காரர்களுக்கேவா? 0 சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை: மூளையாக செயல்பட்டவர் கைது 0 சட்டப்பேரவையை விட உயர்ந்தோர் யாருமில்லை: கேரள ஆளுநருக்கு பினராயி பதிலடி 0 நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தேதி மாற்றம் 0 பாரத ரத்னா விருதைவிட மகாத்மா உயர்ந்தவர்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 0 எம்.ஜி.ஆர்.வேடத்தில் அரவிந்த் சாமி: ஆச்சரியமடைந்த ரசிகர்கள் 0 பெரியாரை அவதூறாக பேசியதாக ரஜினி மீது குற்றச்சாட்டு! 0 திமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி 0 நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு! 0 உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் 0 நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை 0 பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி! 0 பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா! 0 விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விவசாயிகள், வணிகர்களுக்கு மாத ஓய்வூதிய திட்டம்!

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   13 , 2019  00:07:48 IST

விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

விவசாயிகளின் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் சேரலாம்.

வணிகர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தில், ஆண்டு விற்று முதல் ஒன்றரை கோடி ரூபாய்க்கும் குறைவாக உள்ள வணிகர்கள் சேரலாம். கடை வைத்திருப்போர், சில்லறை வர்த்தகர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள், எண்ணெய் ஆலை உரிமையாளர்கள், தரகு முகவர்கள், ரியல் எஸ்டேட் தரகர்கள், சிறு ஹோட்டல்கள், ரெஸ்டாரென்ட் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சேரலாம். மகளிர் சுயஉதவிக் குழுவினரும் இந்தத் திட்டத்தில் பயன்பெறுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பங்களிப்பு அடிப்படையிலான இந்த ஓய்வூதியத் திட்டங்களில் சேர்வதற்கான வயதுவரம்பு 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். இதற்காக பொது சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். பதிவுக் கட்டணமான 30 ரூபாயை மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் வணிகர்களின் மாதாந்திர பங்களிப்புத் தொகை, எந்த வயதில் பதிவுசெய்கிறார்கள் என்ற அடிப்படையில், 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை இருக்கும். குறிப்பாக, 29 வயதில் சேர்வோருக்கு பங்களிப்புத் தொகை, 100 ரூபாயாக இருக்கும். இந்த பங்களிப்புத் தொகையை, பொது சேவை மையம் மூலம் செலுத்தலாம்.

60 வயது வரை இந்தத் தொகையை செலுத்த வேண்டும். இதற்கு இணையான தொகையை மத்திய அரசும் வழங்கும். ஓய்வுபெறும் வயதுக்கு முன்னதாகவே, பயனாளி இறந்துவிட்டால், அந்தத் திட்டத்தை மனைவி தொடரலாம்.

தொடர விரும்பாவிட்டால், அதுவரை செலுத்திய தொகையை வட்டியுடன் மனைவி பெறுவார். ஓய்வு வயதுக்கு பின் பிறகு, பயனாளி இறந்துவிட்டால், அவரது மனைவிக்கு 50 சதவீத ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியமாக கிடைக்கும். இந்தத் திட்டத்தை ஆயுள் காப்பீட்டு கழகம் செயல்படுத்த உள்ளது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...