???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் 0 தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு 0 மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின 0 விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை 0 மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் 0 அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா? வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் 0 வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது! 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பெண்குயின் - விமர்சனம்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   19 , 2020  12:36:54 IST


Andhimazhai Image
ஏழுமாத கர்ப்பிணியாக கீர்த்தி சுரேஷ் என்றதும் இந்திப்படமான கஹானியில் வித்யாபாலன் போல சரியான கதை ஒன்றைப் பிடித்துவிட்டார்கள் போலிருக்கிறது என்று நினைத்துப் பார்க்க உட்கார்ந்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. சைக்கோ திரில்லர் எடுக்க நினைத்து, பிறகு திடீரென இவர்களுக்கு ஒரு சைக்கோவைக் காண்பித்தால் போதாது; இன்னொரு சைக்கோவும் வேண்டும் என்று இரண்டு சைக்கோக்களுடன் களமிறங்கி இருக்கிறார்கள்.
 
 
அஜய் என்ற தன் அருமை குழந்தையை ஆறு ஆண்டுகளாக யாரோ கடத்திவிட்டதால் உருவான சோகத்தைச் சுமந்து திரியும் தாயாக ரிதம் என்ற பெயரில் கீர்த்தி சுரேஷ். முதல் கணவன் இதனால் விவாகரத்துப் பெற்றுவிட, இரண்டாவது கணவருடன் ஏழு மாத கர்ப்பிணி. இதுதான் இப்படத்தில் புதிதான பாத்திரவார்ப்பு. சொல்லிக்கொள்ளும்படியான விஷயம். இந்த காட்சிகளையெல்லாம் போகிறபோக்கில் விவரித்துவிட்டு, சைக்கோக்கள் மீது கவனம் செலுத்துகிறது திரைக்கதை. இதுவரை ஓகே.
 
 
சார்லி சாப்ளின் முகமூடி அணிந்த வில்லன் யார் என்பதை கடைசிவரை மர்மமாக வைத்திருக்க முயற்சித்து, படத்தில் எல்லோரையுமே சந்தேகப்பட வைக்கும் உத்தியைப் பின்பற்றி இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அதுவே கசப்பாக இருக்கிறது. உதவி செய்ய அன்பான கணவன், அத்துடன் முதல் கணவன் இரண்டுபேருமே இருக்கையில் கொடூரமான முறையில் கொலை செய்யும் ஆங்கிலப் பட ஸ்டைல் சைக்கோ, அஜயைக் கடத்தி வைத்த முகமூடி சைக்கோ என கர்ப்பிணிப்பெண் கீர்த்தி ஏன் தனியாக அல்லல் படவேண்டும் என்று பல இடங்களில் தோன்றுகிறது.
 
 
கீர்த்தி, சைரஸ் என்ற பெயருடைய கறுப்பு லேப்ரடார் நாய், இருவரையும் தவிர மீதி யாருக்கும் நல்ல பங்களிப்பு தரவேண்டாம் என்று நினைத்தே கதை எழுதினார்கள் போலிருக்கிறது. சைக்கோக்கள்  கூட சுமாராகத்தான் நடிக்கிறார்கள். 
 
 
பனிபடந்த ஏரி, வண்ணமும் ஒளியுமாக காட்சிகள் என அழகாக ஒளிப்பதிவாளர் தன் பங்கைக் காண்பிக்க, சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் படத்துக்கு திரில்லர் மோஸ்தரைத் தருகிறது. இது இரண்டும் இல்லாமல் போயிருந்தால் ரொம்ப கஷ்டமாகப் போயிருக்கும். 
 
 
இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக்கு முதல் படம் இது என்பதால் பரவாயில்லை. தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் என்பதால் கூடுதலாக எதிர்பார்த்துவிட்டோமோ என்று நினைப்பு வருவதைத்தவிர்க்க முடியவில்லை.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...