???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 3756 சென்னை 1261 0 கிரீமி லேயரை கணக்கிட சம்பளத்தை கருத்தில் கொள்ளக்கூடாது- ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்! 0 மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா! 0 எடப்பாடி பழனிசாமி இரவு, பகல் பாராமல் போராடி வருகிறார்: அமைச்சர் வேலுமணி 0 சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு ஏற்றது! 0 என்எல்சிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 சிபிஎஸ்இ பாடத்திட்டம் 30 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு 0 பிரேசில் அதிபர் ஜேர் பொல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதி 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு: மத்திய அரசு 0 திருப்பதி கோயிலில் 60 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று 0 தமிழகத்தில் இன்னொரு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை: முதலமைச்சர் 0 கொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203! 0 முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! 0 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்! இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார்! 0 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குழந்தைக்கு அம்மாவாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரில்லர்!

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   12 , 2020  05:42:09 IST


Andhimazhai Image
 'சர்கார்' படத்துக்குப் பிறகு தமிழில்  கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் பெண்குயின். இது அமேசான் ப்ரைமில் ஜூன் 19 அன்று நேரடியாக வெளியாகிறது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ்,  பேஷன் ஸ்டுடியோஸ்-தயாரிப்பில் வெளியாகிறது இப்படம். இதன் ட்ரைலர் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. “ஒரு படம் எப்போது தொடக்கம் என்பது தெரியாமலேயே 6 மாதம் போய்விட்டது. உடனே தான் 'பெண்குயின்' கதையை 18 நாட்களில் எழுதிமுடித்தேன். நாயகியை மையப்படுத்தி ஒரு கதை எழுதலாம் என்ற எண்ணோட்டத்தில் தான் எழுதினேன். சாதாரண ஒரு பெண், அசாதாரண சூழலில் மாட்டிக் கொண்டால் என்ன நடக்கும் என்பது தான் 'பெண்குயின்'. இந்தக் கதையை தயாரிப்பு நிறுவனத்திடம் சொன்னவுடன், கீர்த்தி சுரேஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். அவர் நடிக்கவில்லை என்றால், வேறு இருவரை அணுகலாம் என்று திட்டமிட்டு இருந்தோம். ஆனால், கீர்த்தி சுரேஷிற்க்கு கதையைக் கேட்டவுடனே பிடித்துவிட்டது. குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும். அப்படி கீர்த்தி சுரேஷ் இதுவரை நடிக்கவில்லை என்பதால் அவருக்கு புதுமையாக இருக்கும் என தோன்றியது. அந்தக் கதாபாத்திரத்தில் மிகப் பிரமாதமாக நடித்திருக்கிறார்.
இதுவொரு த்ரில்லர் கதை என்பதால், 20 நிமிடத்துக்கு ஒரு சஸ்பென்ஸ் என்று நிறைய கதையில் ஒளித்து வைத்துள்ளேன். ஆகையால் இது தான் கதை என்று என்னால் இப்பொது சொல்ல முடியாது. ஒரு லைனில் சொன்னேன் என்றாலே இது தான் கதை என்று யூகித்துவிட முடியும். ஒரு அம்மா தனது பையன் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்பதை இந்தப் படத்தில் காணலாம். அந்த மகனைக் காப்பாற்ற ஒரு அம்மா எந்த எல்லைக்கும் செல்வாள் என்பதை தான் காணவுள்ளீர்கள்.,” என்று சொல்கிறார் பெண்குயின் பட இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...