அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை - திருச்சி சிவா பேட்டி! 0 அதிமுக கூட்டணி: தேமுதிகவிற்கு 13 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவா? 0 சட்டசபைக்கு குதிரையில் வந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ! 0 வைரலாகும் சிம்புவின் ஒர்க் அவுட் வீடியோ! 0 ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு! 0 கொங்குநாடு மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள்? 0 திமுக கூட்டணியில் இடம்பெறுகிறாரா கருணாஸ்? 0 சட்டமன்றத் தேர்தல்: தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் வாக்குப் பதிவு எந்திரங்கள்! 0 ஆண்கள் தினத்தையும் கொண்டாட வேண்டும் - பாஜக எம்பி! 0 பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது - விசிக! 0 திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்! 0 கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது: சென்னை மாநகராட்சி! 0 அப்துல் கலாம் மூத்த சகோதரர் முகமது முத்து மரைக்காயர் மறைவு 0 பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு: நாடாளுமன்றம் இன்று கூடியது 0 துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: நாராயணசாமி ஆலோசனை

Posted : ஞாயிற்றுக்கிழமை,   பிப்ரவரி   21 , 2021  12:19:21 IST

புதுச்சேரியில் பெரும்பான்மையை நாளை நிரூபிக்க துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன், முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்துகிறார். புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியதால், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி நீக்கப்பட்டு, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், நாளை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் நாராயணசாமியை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மாலை 5 மணிக்குள் வாக்கெடுப்பை நிறைவு செய்யவும், முழு நிகழ்வையும் வீடியோ பதிவு செய்யவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்துகிறார். இதனிடையே நாளை வரை அனைத்து சட்டமன்ற உறுப்பினருக்கும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...