???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஹிந்து- ஹிந்தி - ஹிந்துத்துவா என்பதில் பாஜக அரசு உறுதியாக உள்ளது: ப.சிதம்பரம் தாக்கு

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   23 , 2014  00:55:13 IST


Andhimazhai Image
ஹிந்து- ஹிந்தி - ஹிந்துத்துவா என்பதில் பாஜக அரசு உறுதியாக உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார். சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியது:
 
காங்கிரஸ் ஆட்சியில் நேர்மையாக நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜக அரசு இந்திய அரசு என்பதால் அதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.  2004-இல் வாஜ்பாய் தலைமையிலும், 2009-இல் அத்வானி தலைமையிலும் தேர்தலைச் சந்தித்த பாஜக தோல்வி அடைந்தது. ஆனால், 2014-இல் ஒரு மாநில முதல்வரான நரேந்திர மோடி தலைமையில் தேர்தலைச் சந்தித்த பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. தங்களின் பிரசாரத்தால் உண்மைகளை திறமையாக மறைத்தார்கள். பொய்களை திறமையாக உண்மையாக்கினார்கள். பாஜகவின் இந்தப் பிரசார யுக்தியே இந்த வெற்றிக்கு காரணம்.  ஒரு அரசியல் கட்சி என்றால் பேச்சு, எழுத்து, செயல்பாடு, போராட்டம் ஆகிய நான்கு ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டும்.  அப்போதுதான் அந்தக் கட்சி மக்களிடம் செல்வாக்கு பெறும். இதனை தமிழக காங்கிரஸ் கவனத்தில் கொள்ள வேண்டும். பாஜக அரசு பொறுப்பேற்று நான்கு மாதங்கள் முடிந்து விட்டது. இந்த 120 நாள்களில் மோடி அரசு எந்தப் புதிய கொள்கைகளையும் அறிவிக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பெயர் மாற்றி தங்களது திட்டம்போல செயல்படுத்தி வருகிறார்கள்.
 
காங்கிரஸ் ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையை வார்த்தை மாற்றாமல் அப்படியே பாஜக அரசின் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ளார். கடந்த 4 மாதங்களில் பங்குப் பரிவர்த்தனை, நீதிபதிகள் நியமன மசோதா போன்ற சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவை அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் தயாரிக்கப்பட்டவை. அப்போது அதனை கடுமையாக எதிர்த்த பாஜக, இப்போது அதையே சட்டமாக்கியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 50 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டது. அப்போது இதனை எதிர்த்து கிண்டல் செய்த பாஜக, இன்று ஆட்சிக்கு வந்ததும் மீதமுள்ள 50 கோடி பேருக்கும் ஆதார் அட்டை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 23 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. ஆனால், இப்போது இதனை "ஜன்தன்' என்ற பெயரில் புதிய திட்டம் போல அறிவித்துள்ளார்கள். நிர்மல் பாரத் என்ற பெயரில் காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட கழிவறைகள் கட்டும் திட்டத்தை இப்போது புதிய பெயரில் அறிவித்துள்ளார்கள். காங்கிரஸ் ஆட்சியின் திட்டங்களை, கொள்கைகளை அப்படியே பாஜக அரசு பின்பற்றி வருகிறது. திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டு ஒன்றரை மாதங்களாகியும் புதிய அமைப்பு உருவாக்கப்படவில்லை. முக்கியமான பாதுகாப்புத் துறைக்கு இதுவரை அமைச்சர் நியமிக்கப்படவில்லை.
இந்தியாவில் உள்ள 18 பெரிய மாநிலங்களில் 11 மாநிலங்கள் ஹிந்தி பேசும் மாநிலங்களாகும். கடந்த மக்களவைத் தேர்தலில் இந்த 11 மாநிலங்களில் 89 சதவீத இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மேற்கு வங்கம், ஒடிசா உள்பட 7 ஹிந்தி பேசாத மாநிலங்களில் 23 சதவீத இடங்களில் மட்டுமே பாஜகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. எனவே, ஹிந்தி பேசும் மாநிலங்களில் மட்டும் வெற்றி பெற்றால் மத்தியில் ஆட்சியைப் பிடித்து விடலாம் என பாஜக நினைக்கிறது. அதனைச் செயல்படுத்துவதற்காகவே ஹிந்து- ஹிந்தி - ஹிந்துத்துவா என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இதனால் மிக மோசமான விளைவுகளை நாடு சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்க விரும்புகிறேன். எதையும் ஆராயாமல் பல திட்டங்களை அறிவித்து விட்டு மோடி அரசு தடுமாறி வருகிறது. இது தொடர்ந்தால் அரசின் செயல்பாடுகள் முடங்கும். அதனால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கும் என்றார் ப. சிதம்பரம்.
 
 தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், விஜயதரணி எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...